பக்கம்:மாயக் கள்ளன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 இவ்வாறு மூன்று நாள்கள் சென்றன. நான்காவது நாள் பகலும் சென்றுவிட்டது. அன்றிரவு முடிந்தால் அடுத்த நாள் காலேயிலேயே அவன் சுந்தரியை நேராகவே காணலாம். அதற்குமேல் மயிலுக்குள் மறைந்திருக்க வேண்டியதில்லே. அவளே நேராகப் பார்த்தவுடன், மயிலுக்குள்ளே தான் மறைந்துகொண்டு அங்கே வந்து சேர்ந்த தந்திரத்தை அவளுக்குச் சொல்ல வேண்டுமென்று அவன் துடித்துக்கொண் டிருந்தான். அதைக் கேட்டால் சுந்தரி மிகவும் மகிழ்ச்சி படைவாள் என்று அவனுக்குத் தெரியும். அதல்ை அவன் மிக ஆவலோடு, எப்பொழுது பொழுது விடியும், எப்பொழுது பொழுது விடியும் என்று நான்காம் நாளிரவு தவித்துக்கொண் டிருந்தான். அவனுக்குத் தூக்கம் வரவில்லே அதல்ை அவன் மயிலே விட்டு வெளியே வந்தான். எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. ஒரு விளக்குக்கூட அறையிலே இல்லே. வானத்திலே கருமேகங்கள் சூழ்ந்திருந் தமையால் இருட்டு அதிகமாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் பொருள்கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை. அ த ைல் மணிவண்ணன் மயிலுக்குப் பக்கத்திலேயே வெ ளி யி ல் உட்கார்ந்தான். அவனுல் தூங்கவும் முடியவில்க்ல; சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியவில்லே. பக்கத்து அறையில் சுந்தரி தூங்கிக்கொண்டிருப்பாளென்று அவனுக்குத் .ெ த ரி யு ம். ஆகையால், அந்தச் சமயத்தில் அவள் எழுந்து வரமாட்டாள். இரவில் அவள் மயிலிருக்கும் அறைக்குள் வருவதே கிடையாது. ஆதலால், மணிவண்ணன் குழலே எடுத்து வாசித்தான். அப்படி வாசித்தால் தவருென்றுமில்லே என்று அவன் நினைத்தான். குழலே வாசித்தாவது இரவு நேரத்தைக் கழிக்கலாம் என்று அவன் கருதின்ை. ஆனல், அவனுடையகுழலின் ஒசை சுந்தரிக்குக் கேட்டது. அவளும் அன்று தூங்கவில்ல். அடுத்த நாளேக்கு அந்தத் தனி மாளிகையை விட்டுப் போய்விடலாம். எல்லோரையும் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியால் அவளுக்குத் தூக்கம் வரவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/54&oldid=867719" இலிருந்து மீள்விக்கப்பட்டது