பக்கம்:மாயக் கள்ளன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விட்டெழுந்து, அவளைப் பின்தொடர்ந்து இருட்டிலே பதுங்கிப் பதுங்கிச் சென்றான். வனத்தின் ஒரு பகுதியிலே ஒரு சிறிய மலை உண்டு அதிலே யாருக்கும் தெரியாமல் ஒரு குகை இருந்தது அதற்குள்ளே நாகவல்லி நுழைந்தாள். குகையின் வாயிலிலே ஒரே இருட்டு. அதைக் கடந்து நாகவல்லி வேகமாகச் சென்றதைப் பார்த்த விக்கிரமன் கொஞ்சங்கூடத் தயங்காமல் உள்ளே நுழைந்தான். கிழவன் சொன்ன வார்த்தையை அவன் பொருட்படுத்தவில்லை. ஏதாவது ஆபத்து வந்தால் தன் உடைவாளைக்கொண்டு அதைத் தடுத்துவிடலாம் என்று அவனுக்குத் தைரியம். மேலும் அவன், நாகவல்லி தனக்குத் தீங்கு உண்டாக்கமாட்டாளென்று நினைத்தான். கொஞ்ச தூரம் அவன் இருட்டிலே குகைக்குள் சென்றான். கையால் தடவிப் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. பிறகு, திடீரென்று குகைக்குள்ளிருந்து ஒரு வெளிச்சம் கண்

ம் கூசும்படி தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் பாக்கிறபோது, ஏதோ சுரங்க வழியிலே போவது போலத் பொந்தது. அதே சமயத்தில் உள்ளேயிருந்து நாகப்பாம்பு சறுவதுபோல புஸ் புஸ் என்று சத்தம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/67&oldid=1277002" இலிருந்து மீள்விக்கப்பட்டது