பக்கம்:மாயக் கள்ளன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தோன்றின. அந்த எருமைக்கடா அந்த அறுகம்புல்லே லபக்கென்று கடித்து வாயில் போட்டுக்கொண்டு போய்விட்டது. எருமையாவது மலேயுச்சிக்குப் போகுமென்று ஆத்மரங்கன் எதிர்பார்த்தான். ஆனால், அது அப்படிச் செய்யவில்.ை அங்கே ஓர் ஆழமான பள்ளத்திலே சேறும் சகதியுமாகக் கிடந்தது. எருமைக்கடா அந்தச் சேற்றிலே போய்ப் படுத்துக் கொண்டு சுகமாக அசைபோட ஆரம்பித்தது. ஆத்மரங்கனுக்கு ஒரே கஷ்டமாகப் போய்விட்டது. எந்திரத்தில் அசைபடுவது போல அவன் அதன் வாயிலே அரைபட்டுக்கொண்டிருந்தான்.



பிறகு, நல்லவேளேயாக அந்த எருமை"பெஸ் பொஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்தது. அந்தச் சமயம் பார்த்து, ஆத்மரங்கன் அதன் வாயை விட்டுத் தப்பினேன் பிழைத்தேன்’ என்று ஓடிவந்து சேர்ந்தான். புல்லாக இருந்தது போதும் போதும் என்று ஆகிவிட்டது அவனுக்கு. இனிமேல் அந்த உருவமே எடுப்பதில்லே என்று அவன முடிவு செய்து கொண்டான். ஆத்மரங்கன் மறுபடியும் மலேயடிவாரத்துக்கு வந்தான். மேலே ஏறுவதற்குச் கலபமான வழியென்ன என்று மறுபடியும் எண்ணிப் பார்க்கலானன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/7&oldid=1276949" இலிருந்து மீள்விக்கப்பட்டது