பக்கம்:மாயக் கள்ளன்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 வாயிற்படியை மிதிக்கவே கூடாது என்று துரத்தியடித்தான். வெளிக்கதவைச் சாத்தித் தாழ்போட்டுப் பூட்டினன். அவன் செய்வதையெல்லாம் கவனித்த பரதேசிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவன் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே வீதியில் நடந்தான். அதைக் கண்டு சில பேர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்கள். அப்படி விடாமல் சிரிப் பதற்குக் காரணம் என்னவென்று அவனேக் கேட்டார்கள். ஏழடுக்கு மாளிகையில் பிச்சை கேட்ட விஷயத்தைப்பற்றி அவன் சொன்னன். அதைக் கேட்டுவிட்டு அவர்களும் சிரிக்கத் தொடங்கினர்கள். "அந்த வீட்டுக்குப் போய் நீ பிச்சை கேட்கலாமா? அவன்தான் தங்கப்பித்து மாணிக்கமாச்சே! அவன் ஒரு செல்லாக் காசுகூட யாருக்கும் கொடுக்கமாட்டான்’ என்று அவர்கள் பரதேசியிடம் சொன்னர்கள். பரதேசிக்குத் தங்கமுத்து மாணிக்கத்தைப்பற்றிய விவரம் எல்லாம் தெரிந்தது. அவன் ஒரு வேடிக்கை செய்ய நிக்னத்தான். மறுநாட்காலேயில் அவன் ஒரு பெரிய சாமியார் போல வேஷம் போட்டுக்கொண்டான். தயிைலே ஜடை இருந்தது. தாடி நீளமாகக் காட்சியளித்தது. கழுத்திலே ருத்திராட்ச மால்கள் தொங்கின. இடுப்பிலே காவி வேட்டி கட்டிக் கொண்டான். நெற்றியிலே நிறையத் திருநீற்றைப் பூசிக் கொண்டு, அவன் தங்கமுத்து மாணிக்கத்தின் மாளிகைக்கு முன்னுல் வந்து புலித்தோல் ஆசனம் விரித்து, அதன்மேல் உட்கார்ந்துகொண்டான். சம்போ மகாதேவா, கேட்டவர் களுக்கெல்லாம் தங்கம் கொடுப்பேன். வாருங்கள் வாருங்கள்? என்று கூவின்ை. இதைக்கேட்ட தங்கமுத்து மாணிக்கம் மாளிகையை விட்டு ஓடோடியும் வந்தான். சாமியார் பாதங்களிலே பல முறை விழுந்து வணங்கின்ை. சாமி, எனக்கு அருள் செய்ய வேண்டும் ?’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். டேய், உனக்கு என்னடா வேண்டும் ?’ என்று பரதேசி அதிகாரத் தோரணயோடு கேட்டான்.