பக்கம்:மாயக் கள்ளன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கட்டினன். அந்த மூட்டை மிகவும் கனமாக இருந்தது. இருந்தாலும், எப்படியோ அவன் அதைத் தூக்கித் தலபில் வைத்துக்கொண்டான். குதிரை இல்லாததால் நட ந் தே ஊருக்குப் புறப்பட்டான். பசியைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. தங்கம் கிடைத்ததே அவனுக்குப் போதும். களப்பாறவும் நிற்காமல் ஊருக்கு வந்து சேர்ந்தான். பல நாள்களாக அவன் பட்டினி. தூங்கவும் இல்லை. தூங்கில்ை யாராவது தங்க மூட்டையைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவனுக்குப் பயம். பல நாள்கள் இவ்வாறு நடந்து, கடைசியில் ஊருக்கு வந்து சேர்ந்தான். தனது எழடுக்கு மாளிகையில் நுழைந்தான்.

மூட்டையை ஆவலோடு அவிழ்த்தான். மகரந்தத் துாள்களும், பொன்னரளி இதழ்களும் சேர்ந்து கட்டியாகி, ஒரு மஞ்சள் லிங்கம் போலக் காட்சியளித்தன. தங்கமுத்து மாணிக்கம் அந்தக் கட்டியை ஓர் அறையில் வைத்து அதற்குப் பூசை செய்ய ஆரம்பித்தான். தங்கக் கட்டியே, நீதான் என் தெய்வம்' என்று அதன் முன்ல்ை விழுந்து கும்பிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/77&oldid=1277007" இலிருந்து மீள்விக்கப்பட்டது