பக்கம்:மாயக் கள்ளன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85 அவன் ரகசியமாகப் பல நாள்கள் ஆராய்ச்சி செய்தான், இரவு பகல் தூக்கமில்லாமல் அவன் வேலை செய்தான். பழைய காலத்திலே ராட்சதர்கள் தவம் செய்ததுபோல, இவன் தனது விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்திலே தவம் கிடந்தான். பசியை

பற்றி அவன் கவலைப்படவில்லை. தூங்கி இளைப்பாறவும் அவன் நினைக்கவில்லை. ஓயாமல் ஆராய்ச்சி செய்தான். இப்படி அவன் மாதக்கணக்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய ஆராய்ச்சிக்கூடத்திலே எத்தனையோ வகையான இயந்திரங்கள் இருந்தன. புதிய புதிய திராவகங்கள் புட்டிகளில் காட்சியளித்தன. ஒரு நாள் அவன் வழக்கம் போல, அந்த எந்திரங் களுக்கும் புட்டிகளுக்கும் மத்தியில் இருந்துகொண்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். பல நாள்கள் தூங்காத தால் அவனுக்குத் தூக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. பசி காதை அடைத்தது. இருந்தாலும் அவன் தன் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. புட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து ஒரு புதிய எந்திரத்தைப்பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/88&oldid=1277010" இலிருந்து மீள்விக்கப்பட்டது