பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ருக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இம் முயற்சியில் இறங்க நினைக்கிறேன். அரசருக்குச்செய்யும் தொண்டு, நாட்டுத் தொண்டுக்கு நிகர் என்று நீங்கள் பாடம் நடத்தினர்களே!" என்றான் மணிவண்ணன்

அவன் அறிவோடு பேசியதைக் கேட்கக் கேட்க ஆசிரியருக்கு அவன் மீது நம்பிக்கை உண்டாகியது. "மணிவண்ணா, உன் எண்ணம் நல்ல எண்ணம்தான்! நீ இம் முயற்சியில் இறங்குவது புகழைத் தரும்! உனக்கு இதில் விடாப் பிடியான நோக்கம் இருந்தால் புறப்படு! நீ வெற்றி பெற வேண்டுமென்று நான் நாள் தோறும் பிள்ளையாரை வேண்டித் தொழுது வருவேன்!" என்று கூறி அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

ஆசிரியரின் ஆசீர்வாதம் கிடைத்தமகிழ்ச்சியோடு மணிவண்ணன் அங்கிருந்து புறப்பட்டான். பெற்றோர்களின் தடையை மீறி அவன் தலைநகர் நோக்கிப் பயணம் புறப்பட்டு விட்டான்.

புள்ளம்பாடியிலிருந்து தலைநகரம் நூறு கல் தொலைவு இருந்தது. வழியில் குன்றுகளும்

35