பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஐயா, மாமன்னர் மகளை உறங்க வைத்த மந்திரவாதியைக் கொன்று இளவரசியை எழுப்ப நான் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்" என்றான் மணிவண்ணன்.

ஆசிரியர் திடுக்கிட்டுப் போனார். சாய்ந்து படுத்திருந்தவர் சடாரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.

ஆசிரியர் மணிவண்ணனைக் கவனித்து நோக்கினார். நல்ல அழகு! இளம் பருவம்! அச்சமற்ற பார்வை! அதற்குத் தகுந்த உடம்பு! படிப்பிலும் அவன் சோடையில்லை. இந்தப் பிள்ளை முயற்சி செய்தால் எந்தச் செயலும் வெற்றியாய்த்தான் முடியும் என்ற எண்ணம் அவர் உள்ளத்திலே எழுந்தது.

இருந்தாலும் அந்த மந்திரவாதியைப் பற்றி நினைக்கும் போது, மணிவண்ணனால் அவனை வெல்ல முடியும் என்று நினைக்க முடியவில்லை.

“மணிவண்ணா, அரசராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? வேண்டாம் அப்பா!" என்றார் ஆசிரியர்.

"ஐயா, அரசனாக வேண்டுமென்று நான் இந்த முயற்சியில் இறங்கவில்லை. மாமன்ன

34