பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவனுடைய இளம்பருவத்துக்களை அவரைக் கவர்ந்துவிட்டது. அவன் கண்களில் மிளிர்ந்த அச்சமற்ற பார்வை மாமன்னருக்கு ஒரு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.

இருந்தாலும் சின்னஞ்சிறு பிள்ளையான இந்த இளைஞன்.உலகம் அஞ்சும்படியான அந்த மந்திரவாதியை எப்படி எதிர்த்துக் கொல்ல முடியும் என்று எண்ணிப்பார்த்தபோது அவருக்குச் சிறிதுகூட நம்பிக்கை தோன்றவில்லை.

அவர் மண்டலமெங்கும் முரசு அடித்த பிறகும் எந்த இளைஞனும் முன்வரவில்லை. ஐம்பத்தாறு தேசங்களிலுமே துணிச்சலுள்ள ஓர் இளைஞன் இல்லையா என்று அரசர் எண்ணி வெட்கப்படத் தொடங்கியபோதுதான் மணிவண்ணன் அங்கு வந்து சேர்ந்தான்.

அரசர் மணிவண்ணனை நோக்கிக் கேட்டார்."இளைஞனே, நீஎவ்வாறு மந்திரவாதியைக் கொல்லப் போகிறாய்?"

மணிவண்ணன் உடனடியாக அரசருக்குச் சொன்ன பதில் இதுதான்! "மாமன்னர் அவர்களே,மந்திரவாதி எப்படிப்பட்டவன், எங்குள்ளவன், எவ்வளவு வலிவுடையவன் என்றெல்லாம் இதுவரை நான் தெரிந்துகொள்ளவில்லை. இனி

38