பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேல்தான் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே இப்போது எவ்விதமான திட்டமும் இல்லை.

“மன்னர் பிரானே, நான் ஓர் ஏழை மாணவன். அன்றாட உணவுக்கே உழைத்துப் பிழைக்கும் தாய் தந்தையரை உடையவன். ஆகவே, அவர்களைப் பிரிந்து வந்த நான் சாப்பாட்டிற்கு வழியற்று நிற்கிறேன். எனக்கு வேண்டிய உணவை நான் உழைத்துப் பெற முடியும். ஆனால், என் நேரம் முழுவதையும் மந்திரவாதியைத் தேடும் வேலையில் செலவிட வேண்டியிருப்பதால், உணவுக்காக உழைக்க இனி எனக்கு நேரங்கிடைக்காது. ஆகவே, உணவு பெறுவதற்குரிய பொருளுதவி மட்டும் அவ்வப்போது எனக்குச் செய்து வந்தால், கூடிய விரைவில் நான் இம்மந்திரவாதியைக் கொன்று இளவரசியைத் துயில் எழுப்பி விடுகிறேன்"

மணிவண்ணனுடைய பேச்சில் உண்மையிருப்பதை உணர்ந்தார் மாமன்னர் சோம சுந்தர மாராயர்.

"வீர இளைஞனே, உன் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். மந்திரவாதியைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட நீ முன்வந்தது குறித்து

39