பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த முனிவர் மந்திரவாதியின் ஆளாக இருக்குமோ? தான் புறப்பட்டு வருவதை அந்த மந்திரவாதி அறிந்து கொண்டிருப்பான். தன்னை வரவிடாமல் தடுப்பதற்காக இந்த முனிவரை அனுப்பியிருக்கக்கூடும் என எண்ணிய மணி வண்ணனுக்குக் கோபம் பிறந்தது. தெற்கு நோக்கித் திரும்பாமல் அவன் வந்தவழியே மேற்கு நோக்கித் திரும்பினான். முனிவரைக் கண்ட இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் தொடர்ந்து செல்வதென்று முடிவு கட்டினனான்.

அவன் தன் குதிரையை மேற்கு நோக்கித் திருப்பியபோது, எதிரில் அந்த முனிவர் தன் முன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவருடைய வலது கை தெற்கு நோக்கிச் செல்லும் பாதையைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது.

வாய் பேசாமல் தென் திசையைச் சுட்டிக் கட்டும் அந்த முனிவரைக் கண்டவுடன் மணி வண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. மந்திரவாதியின் ஆளான அந்த முனிவர் தன்னை வழி மறிக்க வந்த மாயாவாதி என்றே முதலில் எண்ணினான். ஆனால் உற்று நோக்கியபோது, அந்த முனவரின முகத்தில்கருணைஒளி பரவிக்

44