பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வனதேவதையின் வாழ்த்து

சாலையின் இருபுறத்திலும் அடர்ந்த காடு இருண்டு கிடந்தது. பார்க்குமிடமெல்லாம் மரஞ்செடி கொடிகளும் காட்டுப் பறவைகளும் விலங்குகளுமே தென்பட்டன. அவ்வப்போது காட்டுக்குள்ளிருந்து யானையின் பிளிறலும் சிங்கத்தின் முழக்கமும் புலியின் உறுமலும் கேட்டன. ஒரு சமயம் கூட்டமாகச் சேர்ந்து நரிகள் ஊளையிடும் ஓசை கேட்கும்; மற்றொரு சமயம் எதற்கோ அஞ்சிக் கலைமான் கூட்டம் கலைந்தோடும் ஒலி கேட்கும்; வேறொரு சமயம் புலியின் வாயில் அகப்பட்டு உயிர் விடும் காட்டெருதின் ஈனக்குரல் காதில் வந்துவிழும்.

ஏழு நாளாக இரவும் பகலும் ஓடி ஓடி அலுத்து நடந்து கொண்டிருந்த குதிரை தீடீ

46