பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒடோடியும் வந்தார். மணிவண்ணனை மனதாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்.

மாமன்னர் சோமசுந்தரமாராயர் பேசினார்:

"குருக்களையா! முதலில் இருபத்தெட்டு நாடுகளைப் பரிசளிப்பதற்கே நான் தங்களிடம் மறுத்தேன். சில நாட்கள் சென்ற பிறகுதான் தங்கள் ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டேன். இப்பொழுதோ ஐம்பத்தாறு தேசங்களையுமே மணிவண்ணனிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டேன். அது மட்டுமல்ல, இளவரசி செந்தாமரையையும் இவனுக்கே திருமணம் புரிந்து வைக்க எண்ணுகிறேன். மணிவண்ணன் செந்தாமரையை மணந்து முடிசூடி இந்த மாநிலத்தை யாளட்டும். நான் ஒய்வு பெற்று அமைதி நாடிக் காலங்கழிக்கப் போகிறேன்" என்றார்.

மாமன்னரின் இந்த முடிவு எல்லோரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. மணிவண்ணனின் தாய்தந்தையரும் ஆசிரியரும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

திருமணத்திற்கும் முடிசூட்டுவிழாவிற்கும் ஆன ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட்டன.

எல்லாம் சிறப்பாக நிறைவேறின.

64