பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"மாமன்னர் அவர்களே, இப்போதே அவளை எழுந்திருக்கச் செய்கிறேன்" என்று கூறி இளவரசி செந்தாமரை துயில்கொண்டிருக்கும் அறையை நோக்கி நடந்தான் மணிவண்ணன். அரசரும் பின்தொடர்ந்தார். அரசியும் ஓடி வந்தாள். அமைச்சர்களும், அதிகாரிகளும் அரண்மனையில் உள்ள அத்தனை வேலையாட்களும் இளவரசியின் அறைமுன்னே கூடிவிட்டார்கள்.

மணிவண்ணன் புள்ளம்பாடிப் பிள்ளையாரை வணங்கினான். தனக்கு உதவி செய்த வன தேவதையை வணங்கினான். கொண்டு வந்த தண்ணிர்ச் செம்பைத் திறந்து தன் கையால் இளவரசியின் உடல் முழுவதும் அந்நீர் பரவிப் படும்படி தெளித்தான்.

இளவரசி செந்தாமரை கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்தாள். தன்முன் அழகே உருவான ஓர் இளைஞன் நிற்பதைக் கண்டவுடன் வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். தன் தாய்தந்தையரைக் கண்டதும் ஓடிப்போய் அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

அதன்பின் எல்லோரும் அரசவைக்குச்சென்றார்கள். இதற்குள் ஊர் எங்கும் செய்திபரவிவிட்டது. கோயில் குருக்கள் அரண்மனைக்கு

63