பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விழித்தெழுவாள் என்று கூறினாள் அந்த அன்புமிக்க வனதேவதை.

மணிவண்ணன் அந்தப் பளிங்குக் குளத்தின் நீரை ஒரு சிறிய செம்பில் மொண்டு எடுத்துக் கொண்டான். பின் தன் பஞ்சகல்யாணிக் குதிரையின்மீது ஏறி மாமன்னர் சோமசுந்தரமாராயரின் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்,

மேக மண்டலங்களின் ஊடே பாய்ந்து பறந்து வரும் குதிரையை, அது வந்திறங்கும் முன்னாலேயே மாமன்னர் கவனித்துவிட்டார். மந்திரவாதிதான் மீண்டும் வருகிறானே என்று மனங்கலங்கிய மாமன்னர், இறங்கியவன் மாணவன் மணிவண்ணன் என்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தான் கட்டி எடுத்துக்கொண்டு வந்த மந்திரவாதியின் தலையை மாமன்னர் முன் அவிழ்த்து வைத்தான் மணிவண்ணன்.

துண்டமாக இருந்த அந்தத் தலையைக் கண்ட பிறகுதான் மாமன்னரின் கவலைகள் மறைந்தன. "மணிவண்ணா,மந்திரவாதி இறந்துவிட்டான். என் மகள் செந்தாமரை இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று கேட்டார் அவர்.

62