பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

123

போய் கதவை மூடிக்கொண்டு பெட்டியைத் திறந்து பார்ப்பான். உடனே அவனுடைய சிநேகிதர்கள் பெட்டிக்குள் இருந்து வெளியில் வரப் போகிறார்கள். அதற்குமேல் அவனுடைய தலைவிதிப்படி முடிவு ஏற்படட்டும்.

மாசிலாமணி:- (மிகுந்த களிப்பும் திருப்தியும் அடைந்து) பேஷ்! சேர்வைகாரரே! நல்ல முதல்தரமான யோசனை! இது அவசியம் பலிக்கும் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. முழு விவரத்தையும் நீர் சொன்ன பிறகுதான், எனக்குத் திருப்தி ஏற்பட்டது. முதலில் இது பைத்தியக்கார யோசனையாகத் தோன்றியது. எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து யோசித்து, யாரும் ஆட்சேபனை சொல்ல முடியாதபடி அவ்வளவு அழுத்தம் திருத்தமான யோசனை சொல்லக்கூடிய நீர், அப்படிச் சொல்லுகிறீரே என்று நினைத்து நான் உம்மை ஏளனமாகப் பேசிவிட்டேன். அதை மனசில் வைக்க வேண்டாம். இந்த ஏற்பாட்டின்படியே காரியத்தை முடித்துவிடும். இதோடு அந்தப் பரதேசி நாய் ஒழிந்து போவது நிச்சயம். நீர் செய்வதை அதிக தாமதம் இன்றி உடனே செய்து விட்டால் அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு சென்னைப் பட்டணம் போவதைக்கூட நிறுத்தி னாலும் நிறுத்திவிடுவார்கள். அங்கேயுள்ள பெண்ணை நாம் அபகரித்துக் கொண்டு வருவதற்கு நமக்கு வேண்டிய அவகாசம் நிரம்பவும் கிடைக்கும். ஆனால் நீர் பாம்புப் பெட்டியைக் கொண்டு போகும்போது மிகவும் ஜாக்கிரதையாய்ப் போக வேண்டும். பெட்டியின் மேல் பல இடங்களில், காற்று உள்ளே போய் வருவதற்காகத் தொளைகள் விட்டிருக்க வேண்டும் அல்லவா. பாம்புகள் ஒருவேளை நாக்கை வெளியில் நீட்டினால், அது கையில் பட்டாலும் படும். அதுவுமன்றி அவைகளுடைய மூச்சுக்காற்றை நாம் சுவாசித்தால், உடனே மயக்கம் வரும் என்று சொன்னரே, அதனாலும் உமக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இ. சேர்வைகாரன்:- பாம்புகளுக்குக் காற்றே அதிகம் தேவை இல்லை. பாம்பாட்டிகள் சாணியால் மெழுகப்பட்ட பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் பாம்பைப் போட்டு மூடித்தானே