பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

193

மணியோடு மூடப்படும். நான் உடனே புறப்பட்டு வந்து சேருகிறேன். நான் வருகிற வரையில் இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டதாக அவர்களிடம் தெரிவித்து, அவர்களை இருக்கச் செய். நான் கச்சேரியை விட்டுப் புறப்பட, இன்னம் 3 மணி காலம் இருக்கிறது. இதற்குள் நான் மன்னார்குடிக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, இவர்களைப் பற்றிய வரலாறு முழுதையும் மறுதந்தி மூலமாய் விவரமாகத் தெரிந்து கொண்டு வந்து சேருகிறேன். அவர்களிடம் அசட்டையாக இராமல், ஜாக்கிரதை யாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்” என்று மறுமொழி கிடைக்கவே அதைப் பெற்ற மனோன்மணி அரை மனதோடு அதை ஏற்றுக் கொண்டு வேலைக்காரியிடம் அதைத் தெரிவித்து, வண்டியில் வந்திருக்கும் மனிதர்களை உபசரித்து உள்ளே அழைத்து வரும்படி தெரிவிக்க, அவளும் டலாயத்தும் உடனே வெளியில் சென்றனர்.

பட்டாபிராம பிள்ளை தமது புத்திரிக்குத் தெரிவித்தபடி மன்னார்குடிக்கு ஒர் அவசரத் தந்தியை உடனே அனுப்பியதோடு, மறுமொழிக்கும் பணம் கட்டி அதை அனுப்பி வைத்தார்.

கால் நாழிகை காலம் கழிந்தது. விருந்தாக வந்த வேஷக்காரர்களை அழைத்துக் கொண்டு வேலைக்காரி மேன் மாடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவர்களோடு வந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தட்டில் ரவிக்கைத் துண்டுகள், பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் முதலிய வஸ்துக்களை சுமந்து வந்தாள். தனது இளைய மாமியார் திவ்ய தேஜோமயமான அழகும் அலங்காரமும் வாய்ந்த மகா வசீகரமான யெளவனப் பெண்மணியாக இருந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் அளவற்ற பிரமிப்பும் ஆச்சரியமும் ஒருவித சந்தோஷமும் அடைந்தவளாய் மாறினாள்.

கந்தசாமி இயற்கையிலேயே அற்புதமான தேக அமைப்பும் வசீகரமான முகத்தோற்றமும் வாய்ந்த யெளவனப் புருஷன் ஆதலாலும், அவன் தனது கலாசாலையில் நடத்தப்பட்ட நாடகங்களில் பல தடவைகளில் ஸ்திரி வேஷந் தரித்து அவ்விஷயத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான் ஆதலாலும், அவன் மனோன் மா.வி.ப.I-14