பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மாயா விநோதப் பரதேசி

தூண்டப்பட்டு அவ்விடத்திற்கு வந்தவன் ஆதலால், அவள் வெள்ளைக்காரி போல இருந்தது அவனுக்கு வியப்பாகவாவது புதுமையாகவாவது தோன்றவில்லை. ஏனெனில், அவள் அப்படித்தான் இருப்பாள் என்று அவன் முன்னரே நிச்சயித்து இருந்தான். ஆகையால், எதிர்பார்க்காத விஷயம் உறைப்பது போல எதிர்பார்த்த விஷயம் மனதில் அவ்வளவாக உறைக்காது அல்லவா. ஆனால் ஆடை ஆபரணங்களிலும், அலங்காரத்திலும், நடை நொடி பாவனைகளிலும் அவள் எவ்வளவுதான் வெள்ளைக்காரி போலத் தோன்றினாலும், அவளிடம் பலமான மன உறுதியும், தேகபரிசுத்தமும், ஒருவிதமான மிருதுத் தன்மையும், உள்ளும் புறமும் ஒத்த கபடமற்ற நடத்தையும் ஸ்பஷ்டமாகத் தென்பட்டன. பிறருக்குத் தான் கீழ்ப்படிந்து நடப்பது அநாவசியம் என்ற எண்ணத்தை அவள் உறுதியாகக் கொண்டிருந்தாள் என்பது எளிதில் விளங்கியது. ஆனாலும், தான் தனக்கு மரியாதை செய்து எவரையும் அன்பாகவும் மிருதுத் தன்மையோடும் உபசரித்து நடத்த வேண்டும் என்ற மேலான குனம் அவளிடம் நிரம்பி இருந்ததாகக் கந்தசாமி உணர்ந்தான். அவளது யெளவன காலத்திற்குரிய செழிப்பும், அவளது இயற்கை அழகிற்குரிய பரிபூர்ணமான மலர்ச்சியும் அவளிடம் காணப்படாவிட்டாலும், அவளது அலங்காரமும் பக்குவகால வனப்பும் ஒருவாறு காந்த சக்தி போலக் கந்தசாமியின் மனதைக் கவர்ந்தன. அவள் தன்னை மணக்க நிச்சயிக்கப்பட்டிருக்கிறவள் என்ற நினைவு அவனது மனத்திலிருந்து அதை ஒருவாறு இளக்கி அவளது விஷயத்தில் அன்பையும் இரக்கத்தையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆகையால், அந்த நினைவும், அவளிடம் காணப்பட்ட மேலே குறிக்கப்பட்ட வசீகர சக்தியும் ஒன்றுகூடி அவளது வெளித்தோற்றமான குற்றங்கள் அவனது மனதில் அவ்வளவாக உறைக்காதபடி செய்து கொண்டிருந்தன. மனோன்மணியம்மாளினது மனதில் அப்போது எவ்விதமான உணர்ச்சிகள் உண்டாயின என்பதை நாம் கவனிப்போம். முன்னரே விவரிக்கப் பட்டுள்ளபடி, அவள் இங்கிலீஷ் கல்வியைக் கரைகான வேண்டும் என்றும், பெரிய பெரிய பரீட்சைகளில் தேறிப்பட்டங்கள் பெற வேண்டும் என்றும், அதனால் தனக்கு மிகுந்த