பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மாயா விநோதப் பரதேசி

செய்வதுமன்றி, தங்களுடைய முகத்தழகு, மார்பழகு முதலியவை எடுப்பாக வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற கருத்தோடு, நம்மவர்கள் எப்போதும் நாணிக்குனிந்து கட்டை விரலைப் பார்த்தபடி நடக்க வேண்டும் என்ற அநுஷ்டானத்தை வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஸ்திரீகள் அவர்கள் அணியும் ஆடைக்குள் இரும்புக் கம்பியினால் ஆன கார்செட் என்ற உள்சட்டை ஒன்றை அணிந்து அதற்குமேல் கெளன் முதலியவற்றைத் தரித்துக் கொள்ளுகிறார்கள். உட்புறத்தில் சதைப்பிடிப்பு இல்லாவிட்டால் கூட அந்தக் கார்செட் என்ற கருவி ஒவ்வொரு பாகத்தையும் பிரமாதமாகத் தூக்கிக்காட்டி, ஒருவித வெளிப் பகட்டை உண்டாக்குகிறது. அது மாத்திரமல்ல. எந்தத் தேசத்திலும் ஸ்திரீகள் மிருதுவான தன்மை உடையவர்கள் ஆதலால், அவர்கள் இயற்கையிலேயே குனிந்து நடக்கக் கூடியவர்கள். இங்கிலீஷ்காரர் தம்முடைய ஸ்திரீகள் நாணிக் குனிந்து நடக்கக் கூடாதென்ற எண்ணத்தோடு, அவர்கள் காலில் அணியும் பூட்சின் பின்பக்கத்தை அதாவது குதிகாலுக்குக் கீழே இருக்கும் பாகத்தை அரைசாண் உயரம் உள்ளதாகவும், அதன் முன்பக்கம் சரிவாய் சாதாரண பூட்சுபோல இருக்கவும் செய்து விடுகிறார்கள். அப்படிச் செய்வதனால், அவர்களுடைய ஸ்திரீகள் முன் பக்கம் சாய்ந்து குனிந்து நடக்க வேண்டும் என்பது அவர்களுடைய கருத்தென்று நம்மவர்கள் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. அந்த பூட்சை அணிந்து கொண்டு சாதாரணமாக நிற்பதே முடியாது. இன்னும் குனிந்தால் அது உடனே கீழே தள்ளி விட்டுவிடும். ஆகையால், அதை அணிந்து கொள்ளும் ஸ்திரீகள் தங்களுடைய முகம் மார்பு முதலிய பாகங்களை எப்போதும் நிமிர்த்தி நாற்காலியில் சாய்ந்திருப்பது போலப் பின்புறம் சாய்ந்திருந்தால் அன்றி, அவர்கள் நிற்கவும், நடக்கவும் முடியாது. இப்படி அவர்களுக்கும் நமக்கும் பல விதங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் மன்னார் கோவிலார் வீட்டில் வாழ்க்கைப்படுவதென்றால், எந்த விஷயத்திலும் நம்முடைய தேசத்துப் பழக்கங்களை அனுசரித்து நமது ஆடை ஆபரணங்கள் முதலியவைகளை அணிந்தால் அன்றி, உங்களிடம் உங்கள் புருஷர் முதலியோருக்குப் பிரியம்