பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

மாயா விநோதப் பரதேசி

நின்றனர். சாமியாரது தேக நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும், அவர் பிழைக்கக் கூடிய சின்னம் ஏதாவது உண்டாயிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெரிதாக எழுந்து வருத்தலாயிற்று. கண்ணப்பா சந்தடியின்றி மெதுவாக நடந்து கட்டிலை அணுகி சாமியாரினது முகத்தை உற்று நோக்கினான். அவர் அயர்ந்து சுரணையற்று ஆழ்ந்து தூங்குவது போன்ற தோற்றம் தென்பட்டது. தாம் அவ்விடத்தை விட்டுப் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு சிவகாமியின் இடத்திற்காவது அல்லது தாம் வந்த வாசற்படியின் கதவு திறந்து கொண்டு வெளியில் உள்ள வேலைக்காரியின் இடத்திற்காவது போய், உண்மையைத் தெரிந்து கொள்ளலாமா என்ற யோசனை தோன்றியது. ஆனாலும், தாம் கதவைத் திறந்து ஒசை செய்வது ஒருவேளை சாமியாருக்குத் துன்பகரமாக இருக்குமோ என்ற நினைவும் உண்டானது ஆகையால், எதையும் செய்ய மாட்டாமல் அவர்கள் தயங்கிக் கற்சிலைகள் போல அப்படியே நின்றனர். அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்தது.

சாமியாரது தூக்கம் கலைவது போலத் தோன்றியது. அவர் தமது கைகளை அசைக்கவும் உடம்பை அப்புறம் இப்புறம் புரட்டவும் ஆரம்பித்தார். ஆனால் கண்கள் மாத்திரம் மூடப்பட்டபடி இருந்தன. அவர் தாமாகவே கண்களைத் திறந்து கொள்வார் என்றும், அதன் பிறகே தாம் அவரோடு பேச வேண்டும் என்றும், கண்ணப்பாவும் வடிவாம்பாளும் நினைத்துக் கொண்டு அசையாமலும் ஒசை செய்யாமலும் சாமியாரை உற்று நோக்கியபடி நின்றனர். அவரது உடம்பு மறுபடியும் அசையாமல் ஒய்ந்து அசைவற்றுப் போயிற்று. மேலும் கால் நாழிகை காலம் கழிந்தது. அவர் திரும்பவும் தமது கைகளைத் துக்கி அப்புறம் இப்புறம் போட்டு உடம்பைத் திருப்பினார். அவ்வாறு அவர் செய்ததில் இருந்து, அவர் சொற்ப பாகம் பிரக்ஞையோடு இருந்ததாக அவர்கள் இருவரும் யூகித்துக் கொண்டனர். சாமியாரது உண்மையான தேக நிலைமையை அறிந்து கொள்ளாமல் அதற்கு மேலும் அப்படிப்பட்ட சம்சயமான நிலைமையில் இருக்க அவர்களது