பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மாயா விகோகப் பரதேசி

நிச்சயதார்த்தத்தன்று, என்னென்ன செய்வதாக உத்தேசம்?" என்றாள்.

வேலாயதம் பிள்ளை, "நிச்சயதார்த்தத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் திட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் அதில் நம்முடைய ரயில் செலவு படிச்செலவு முதலிய சொற்ப பாகம் போக மிகுதி எல்லாம், பெண் வீட்டாருக்குப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன். முழுதும் தங்க ஜரிகையும் - நற்பவழங்களும் நல்முத்துகளும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை இரண்டும் மாத்திரம் ஐயாயிரம் ரூபாய், ஒரு ஜோடி வைரக் கம்கமல், வைரங்கள் பதித்த தங்க ஒட்டியாணம், ஐந்து வைரப் பதக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தொங்கும் வைர அட்டிகை முதலிய நகைகள் எல்லாம் சுமார் ஐம்பதாயிரம்: ரூபாய். இவை தவிர, இந்த வருஷமே தங்க சாலையில் அடித்து வெளியானதும் பளபளவென்று மின்னிக் கண்ணைப் பறிக்கக் கூடியதாகவுடன் இருக்கும் முழுப்பவுன்களில் இரண்டாயிரம் பவன்களை ஒரு தங்கத் தாம்பாளத்தில் புடவை ரவிக்கை முதலிய சாமான்களை வைத்து சம்பாவனை செய்யப் போகிறேன். வெற்றிலை இருநூறு கவளி, பாக்கு 2 மூட்டை; ரஸ்தாளி வாழைப்பழம் ஒரு வண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை, கற்கண்டு 2 மூட்டை சீனிச்சர்க்கரை 2 மூட்டை இவைகளையும் வாங்கி எல்லாவற்றையும் கொண்டு போய் அவர்களுக்கெதிரில் பரப்பிவிடப் போகிறேன். அந்த ஊரில் உள்ள ஜனங்கள், இப்படிப்பட்ட அபாரமாக வரிசைகளைக் கண்டு அவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நிரம்பவும் மதிப்பாக எண்ணக் கொள்ளுவார்கள். சம்பந்தியும் நம்மைத் தக்க மனிதர்கள் என்று மதிப்பார். மனோன்மணியும். நம்முடைய பையனை அற்ப சொற்பமான மனிதன் என்று நினைக்க மாட்டாள்" என்றார்.

அதைக் கேட்ட திரிபுரசுந்தரியம்மாள் அடக்க இயலாத பெருங் களிப்படைந்து, "ஆகா பேஷ் பேஷ் நல்ல ஏற்பாடு!- நீங்கள் இத்தனை எண்ணங்களையும் மனசிற்குள்ளாகவே வைத்துக் கொண்டு இதுவரையில் கொஞ்சமாவது வெளியிட வில்லையே. நம்முடைய பெரியவரை இதற்காகத் தான் முன்பாகப் பட்டணத்துக்கு இன்று அனுப்புகிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள்