பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மாயா விநோதப் பரதேசி

பிரத்தியேகமாய்த் தயாரிக்கப்பெற்ற ஒரு வெள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் வேலாயுதம் பிள்ளை அவர்கள் உத்தேசித்தபடி அந்த வருஷத்திலேயே தங்க சாலையில் இருந்து அச்சடிக்கப்பட்ட இரண்டாயிரம் புதிய பவுன்களும் வெகு பிரபாசையின் மேல் சேகரிக்கப்பட்டு ஒரு தங்கத் தாம்பாளத்தில் வரிசை வரிசையாக அடுக்கி கெட்டியான ஓர் இரும்புப் பெட்டியில் ஜாக்கிரதையாக வைக்கப்பட்டிருந்தன. அவை நிற்க, பட்டாபிராம பிள்ளை , வடிவாம்பாள், திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, கந்தசாமி முதலியோருக்காக வாங்கப்பட்ட முதல் தரமான புதிய புடவை வேஷ்டி மூட்டைகளும், பாக்கு, சர்க்கரை, கற்கண்டு, குங்குமம், மஞ்சள் முதலியவற்றின் மூட்டைகளும், கரும்புக் கட்டுகள், வாழைத்தாறுகள் முதலிய சமையல் சாமான்கள், சமையலுக்குத் தேவையான பெரும் பெரும் பாத்திரங்கள் முதலிய சகலமான பொருட்களும் ரயிலில் ஏற்றப்படுவதற்குத் தகுதியான நிலைமையில் பத்திரப்படுத்தப் பட்டு, அவரது மூன்றுகட்டு மாளிகையின் அடிப்பாகம், மேன்பாடம் முதலிய முழு இடத்திலும் நிரம்பி மனிதர் நடக்க இடமற்று அடர்ந்து கிடந்தன. வேலாயுதம் பிள்ளை போட்ட திட்டத்திற்கு மேல் செலவுகள் அதிகரித்துப் போனமையால், அவர் அதை இரண்டு லட்சம் ஆக்கிக் கொண்டார். வடிவாம்பாள், திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, நடராஜ பிள்ளை ஆகிய எல்லோரும் நிச்சயதார்த்தத்தை நிரம்பவும் ஆவலோடும் ஆசையோடும் எதிர்பார்த்துப் பார்த்து மனவெழுச்சி அடைந்து பூரித்துக் களிகொண்டு இரவு பகல் அதே பேச்சாக பேசியே தமது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். முதல் நாளாகிய திங்கட்கிழமை அன்று திரிபுரசுந்தரியம்மாள் வடிவாம்பாள் இருவரும் தமது மாளிகையில் இடம் இல்லாமல் போனது பற்றி, சுந்தரம் பிள்ளையின் பங்களாவிற்குப் போய், கந்தசாமியின் கலியாணச் சடங்கிற்குப் பூர்வாங்கமாக சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தி, ஐந்தாறு ஸ்திரீகளுக்கு மங்கள ஸ்நானம் செய்து வைத்து, வளையல்கள் அணிவித்து, புதிய புடவை ரவிக்கைகள் உடுத்திவிட்டு, சிறப்பான விருந்தளித்து அனுப்பிவிட்டு, மாது சிரோன்மணியான சிவக்கொழுந்தம்மாளையும் சுந்தரம்