பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மாயா விநோதப் பரதேசி

அப்படியே மயங்கி ஸ்தம்பித்துப் போகும்படி செய்வனவாய் இருந்தன. அவனது முன்புறத்தில் சிரம், நெற்றி, மூக்கு, செவிகள், கழுத்து, மார்பு, முழங்கைகள், முன்கைகள், விரல்கள் முதலிய சர்வாங்கமும் ஒரே வயிரமயமாக நிறைந்து போனதோடு, அவனது இடுப்பில் பாவாடையின் மீது காணப்பட்ட மகா விநோதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஒட்டி யாணத்தினால் அவனுக்கு ஏற்பட்ட வசீகரத் தன்மைக்கு நிகர் இந்த உலகத்திலேயே காண்பதரிதென்றே மதிக்க வேண்டும்.

அவ்வாறு இயற்கையழகும் செயற்கை அலங்காரமும் திரண்டு எழிலின் லாரமாயும் வசீகரத்தின் வடிவாகவும் இன்பத்தின் திரளாகவும் தோன்றிய நமது கந்தசாமியைக்கண்டு, அவனைப் படைத்த பிரமதேவனும் சிறிதுநேரம் ஸரஸ்வதியை மறந்து அவன் மீது மோகங்கொண்டு அவனை ஆசை நாயகியாய் வைத்துக் கொள்ள அவாக்கொள்வான் என்றால், சேலை கட்டிய ஒரு மரத்தைக் கண்டு மோகங் கொள்ளக்கூடிய நமது மாசிலாமணி அவனைக் காண்பானாயின் அவனது உயிரும் உள்ளமும் எவ்வாறு தவிக்குமென்பது கூறாமலேயே விளங்கும். ஆடைகள் ஆபரணங்கள் முதலியவற்றால் அதிகரித்துக் தோன்றும் பொய்த்தோற்றமாகிய மனிதரது செயற்கை அழகைவிட, நற்குண நல்லொழுக்கமாகிய இயற்கை அழகையே அதிகமாய் விரும்பும் மனப்பான்மையுடைய கந்தசாமியே, அவ்விடத்தில் இருந்த ஒரு நிலைக்கண்ணாடியில், தனது மோகனாவதாரத்தைப் பார்த்து முற்றிலும் பிரமிப்பும் திகைப்பும் அடைந்து, கண்ணாடிக்குள் தோன்றிய தனது சாயலைக் கண்டு மோகித்து, தன்னை மறந்து அதன் முகத்தில் முத்தம் வைப்பவன் போல ஆசையோடு கொஞ்சலாகத் தனது உதடுகளைச் சேர்த்து ரஸ்மாகச் சுவைத்து நொட்டையிட்டா என்றால், அவனது அழகின் ஒப்புயர்வற்ற கவர்ச்சிக்கு அதைவிட சிலாக்கியமான வேறு அத்தாகூஜியும் தேவையோ அவனது அலங்காரம் முடிந்தபோது மாலை ஆறரை மணி சமயமாயிற்று. அவன் அவ்விடத்தில் கிடந்த மஞ்சத்தின் மீது உட்கார்ந்து திண்டுகளில் சாய்ந்த வண்ணம் சிந்தனையிலாழ்ந்து தான் அன்றைய இரவில் எப்படி அவ் விடத்தை விட்டுத் தப்பி வெளியில் போவதென்பதைப்பற்றி எண்ணுவதும், இடை