பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

201

மாசிலாமணி:- (நிரம்பவும் தத்தளித்தவனாய்) ஏதேது! நீ பெருத்த வாயாடியாக இருக்கிறாயே! உன் முகத்தழகைப்போல அகத்தழகும் இருக்குமென்றல்லவா நான் நினைத்தேன். பேஷ்! பேஷ்! நீ பேசுவது நன்றாயிருக்கிறது. உன்னைக் கட்டிக்கொண்டு நான் கடைத்தேறிப் போய்விடலாம். பல தனிகர்கள் எனக்குப் பெண் கொடுக்க முன் வந்திருக்கலாம். அவர்களுடைய பெண்கள் பார்ப்பதற்கு அழகாகவும், நற்குணம் வாய்ந்தவர்களாகவும் இருக்கலாம்; அதனால் அவர்களைக் கண்டு என் மனம் சபலித்திருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஜாதி மட்டம் என்கிற காரணத்தினாலோ, அல்லது, அது போன்ற வேறு காரணங்களினாலோ அவர்களுடைய சம்பந்தத்தை நான் விலக்க நேர்ந்திருக்கலாமல்லவா? பட்டாபிராம பிள்ளை எங்களுடைய ஜென்ம விரோதி யாயிருந்தாலும் அவர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்; பெரிய கலெக்டர் பதவியிலிருக்கும் செல்வச் சீமான்; அவருடைய சம்பந்தம் எல்லா அம்சங்களிலும் சிரேஷ்டமானது. அந்த நிலைமையில் அவருடைய பெண்ணைப் பார்த்து அவளுடைய குணவிசேஷங்களை உணர்ந்து அவள் பேரில் நான் பலமாக ஆசைகொண்டிருந்ததால், நான் அவளைப் பலாத்கார மாகவாவது கொண்டு வராமல் வேறே என்னதான் செய்கிறது? அவளை நான் என்னுடைய பெண்ஜாதியாக அடைந்திருந்தால், நான் என்னைப் பெருத்த பாக்கியவானாகவே எண்ணிக் கொள்வேன். அதற்கு ஒரு பெருத்த சத்துருவாக நீ வந்து சேர்ந்தாய். என்னுடைய ஆள்கள் ஆள் மாறாட்டமாக உன்னை எடுத்து வந்திருந்தால்தான் என்ன? அப்போதே நீ உண்மையைச் சொல்லி இருந்தால் என்னுடைய ஆசை பூர்த்தியாயிருக்கும்; அதைக் கெடுத்தவள் நீதான். அதற்காக நான் உன்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

போலி மணப்பெண்:- (மாசிலாமணியைப் பார்த்து இனிமையாக நகைத்து) ஆகா! அப்படியே செய்யுங்கள்! தாங்கள்தான் என்னுடைய பர்த்தாவாகி விட்டீர்கள். நான் தங்கள் அடிமையாய் விட்டேன். இனி தாங்கள் இந்த ஏழையை எவ்வித ஆக்கினைக்கு உள்படுத்தினாலும், அதையே பெருத்த பாக்கியமாக நான் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவள். ஆனால், இதில் இன்னொரு