பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மாயா விநோதப் பரதேசி

வகுப்பு வண்டியைப் போல, படுக்க சோபா முதலிய வசதிகள் உடையதாம். இனி வேறே யார் வந்து கேட்டாலும் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டு தாம் கொடுக்கிறதில்லை என்றும், வண்டியில் நாம் ஏறியவுடனே அதை வெளியில் பூட்டி விடுவதாகவும், அதன் பிறகு நாம் பட்டணம் வரையில் சுகமாய்ப் போகலாம் என்றும், 2-வது வகுப்பில் இனி இடமில்லை ஆகையால், அந்த வகுப்பிற்கும் டிக்கெட்டு கொடுக்க வேண்டாம் என்று வடக்கே உள்ள பெரிய ஸ்டேஷன்களிற்கெல்லாம், தாம் தந்தி கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ஆகையால், நமக்கு ஒன்றும் கெடுதல் இல்லை. நாம் இரண்டாவது வகுப்பு வண்டியிலேயே வசதியாகவும் ஏகபோகமாகவும் போகலாம்" என்றார்.

அதைக் கேட்ட ரமாமணியம்மாள் ஒரளவு ஆறுதல் அடைந்தாள் ஆனாலும், தான் தனது ஆசை நாயகனை சென்னைக்கு முதல்' வகுப்பு வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு போவதனால் ஏற்படும் பெருமையும் ஆத்மதிருப்தியும் தனக்கு இல்லாமல் போகும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதே என்ற ஒருவித அதிருப்தி அவளது மனதில் இருந்து வந்தது. ஆயினும் அதற்கு மேல் தான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பதையும் அவள் உணர்ந்தாள் ஆதலால், அந்த வார்த்தையை அவ்வளவோடு நிறுத்தி, "சரி! பக்கிரியா பிள்ளைக்கு ஒரு டிக்கெட்டுக் கொடுத்து விட்டீர்களா? இதில் இன்னொரு இடைஞ்சல் இருக்கிறதே! நாம் போய் வண்டியில் ஏறிக்கொண்டதற்குக் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தானே, பக்கிரியா பிள்ளை யாரோ அன்னியர் போல வந்து நம்முடைய வண்டியில் ஏறப்போகிறார். நாம் ஏறிய உடனே ஸ்டேஷன் மாஸ்டர் வந்து கதவைப்பூட்டி விடுவாரோ என்னவோ?" என்று நிரம்பவும் கவலையாகக் கூறினாள்.

தந்தை, "அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு நாலு டிக்கெட்டுக் கொடுத்தது அவருக்கு நினைவிருக்கும். பக்கிரியா பிள்ளை நம்மைச் சேர்ந்த மனிதர் என்றே நாம் அவரிடத்தில் சொல்லி விடுவோம். பக்கிரியா பிள்ளை ஏறுவதற்கு முன் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து கதவைப் பூட்டினால், நம்முடைய