பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

23

மாசிலாமணி: ஏன் அந்தப் பரதேசி நாயை நீர் மறந்தே போய் விட்டீர் போலிருக்கிறதே! வெள்ளிக்கிழமை நீர் அவனுடைய தலைக்குச் சீட்டு அனுப்பிவிட்டுப் போனதை நீர் அடியோடு மறந்துவிட்டீர் போலிருக்கிறதே!

இடும்பன் சேர்வைகாரன்:(திடுக்கிட்டு மிகுந்த ஆவலோடு) ஆம், ஆம். அந்த விஷயம் எப்படி முடிந்தது என்பதைப்பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா? அவன் பெட்டியைத் திறந்து பார்த்தானா? பாம்புகள் அவனைக் கடித்தனவா? அப்படி நாம் தாம் செய்தோம் என்ற சந்தேகம் ஏதாவது ஏற்பட்டதா? வந்தவுடன் நானே அதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டு வந்தேன். இந்த அம்மாளைப் பற்றிய கவனத்தில் அதை நான் கேட்கவே மறந்து விட்டேன்.

மாசிலாமணி: (அளவற்ற குதுகலமும் பூரிப்பும் தோற்றுவித்தவனாய்) சேர்வைகாரரே! உம்முடைய யுக்தி அற்ப சொற்பமானதா? அது பலிக்குமா பலிக்காதா என்று கூட நீர் சந்தேகப்பட வேண்டுமா? அந்தப் பரதேசி நாய் ஒழிந்து போய், போன இடத்தில் புல்கூட முளைத்துவிட்டது. அவன் கடிதத்தைப் பிரித்துப் பார்த்த உடனே அதை உண்மை என்று நம்பித் தனியாக இருந்தபடி பெட்டியைத் திறந்து பார்த்தான் போலிருக்கிறது. உடனே பாம்புகள் குபிரென்று வெளிக்கிளம்பி அவனைக் கடித்து விட்டு ஓடிப்போய்விட்டன. அவன் உடனே ஸ்மரணை தப்பி மயங்கிக் கீழே விழுந்திருக்கிறான். அவனுடைய சம்சாரம் முதலிய ஜனங்கள் அவன் உணர்வில்லாமல் கிடந்ததைக் கண்டு, சந்தேகம் கொண்டு அவனுடைய உடம்பை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். உடம்பில் இருந்த பல் குறிகளைக் கண்டும், அவனுடைய கைநாடியைப் பார்த்தும், அவனைப் பாம்புகள் தான் கடித்திருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். தன்னைப் பாம்பு கடித்து விட்டதென்ற விவரத்தைக்கூட அவன் வெளியிடமாட்டாமல், அந்த உத்தரக்ஷனத்திலேயே மயங்கிக் கீழே வீழ்ந்திருக்கிறான். அவனுக்கு எத்தனையோ கடிதங்கள் வருகின்றன. ஆகையால், நாம் அனுப்பிய கடிதத்தையும், பெட்டியையும் யாரும் கவனித்திருக்கவாவது சந்தேகப்