பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

மாயா விநோதப் பரதேசி

வெகு சுலபத்தில் யூகித்துக் கொண்டு அவளுக்கு அனுகூல மாகவே சொல்லிலும் செய்கையிலும் நடிக்கலாயினர்.

அதற்கு மேல் விசேஷ சம்பவம் எதுவும் இல்லாமல் அந்த இரவு கழிந்தது. விடியற்கால சமயத்தில் நீலலோசனியம்மாள் தூங்கி ஆடி விழுந்ததைக் கண்ட மற்ற மூவரும் தமக்குள் சைகை செய்து கொண்டு ஒருவர் ஒருவராய் எழுந்து சிறிது தூரமாக இருந்த ஒரு சோபாவண்டை போய்த் தமது மனக்கருத்தை வெளியிட்டுக் கொண்டதன்றி, நீலலோசனியம்மாளை விடாமல் சென்னையில் தம்மோடுகூட வைத்திருந்து, தாம் திரும்பி கும்பகோணத்திற்குப் போகும் போது கூடவே அழைத்துக் கொண்டு போய்த் தமது வீட்டில் வைத்துக் கொண்டு, அவளிடம் வாஞ்சை உள்ளவர்கள் போல நடித்து, அவளது ஐந்து லட்சம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டு அவளை ஒழித்துவிட வேண்டும் என்று தமக்குள் முடிவு செய்து கொண்டனர். அதுவரையில் மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை வீட்டாரை அங்கஹlனப்படுத்தும் விஷயத்தில் சென்று லயித்துப் போயிருந்த அவர்கள் மூவரது மனமும் அதை அடியோடு மறந்து, நீலலோசனியம்மாளைத் தமது வஞ்சக வலையில் வீழ்த்துவதைக் குறித்து மனக்கோட்டைகள் நிர்மாணம் செய்வதில் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அதுவுமன்றி, அவர்கள் இன்னொருவித முடிவையும் செய்து கொண்டனர். பக்கிரியா பிள்ளை தம்மோடுகூட இருப்பதைப் பற்றி இடும்பன் சேர்வைகாரன் சந்தேகங்கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாம் ரயில் பிரயாணம் செய்த காலத்தில் நீலலோசனியம்மாளும், பக்கிரியா பிள்ளையும் தங்களுக்குப் பழக்கமானார்கள் என்றும், பக்கிரியா பிள்ளை நீலலோசனியம்மாளுடைய மகன் என்றும், அவர்கள் பட்டணத்திற்கு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள் என்றும், அவர்கள் தங்களோடு கூடவே இராமசாமி முதலியார் சத்திரத்தில் தங்குவார்கள் என்றும், பிறகு அவர்கள் தங்ளுடனேயே கும்பகோணம் வந்து தங்களுடைய வீட்டின் இரண்டாவது கட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கிறார்கள் என்றும், தாங்கள் இடும்பன் சேர்வைகாரனிடம் சொல்ல வேண்டும்