பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைந்தவுடன், இடும்பன் சேர்வைகாரனும் போயியும் சாமான்களை எல்லாம் இறக்கி உள்ளே கொண்டு போய்ச் சேர்த்தனர். அந்தச் சத்திரம் ஒரே காலத்தில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் தங்குவதற்கும், சுயமாகவே சமையல் செய்து கொள்வதற்கும் தேவையான கூடங்கள், திண்ணைகள், அறைகள் முதலியவை உடைய கட்டிடம் என்பதை நாம் கூறுவது மிகையாகாது. அந்தச் சத்திரத்தின் ஒரு பாகத்தில் பிராமணர்களின் போஜனசாலை ஒன்று ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. சுயமாகவே சமையல் செய்து கொள்ள மாட்டாத பிரயாணிகள் பணம் கொடுத்து மேற்படி போஜன சாலையில் உண்பது வழக்கம். நமது ரமாமணி யம்மாளின் தாயாரான விசாலாகூஜியம்மாள் நிரம்பவும் உழைப்புக் குணம் உடையவள் ஆதலால், தங்களுக்குத் தேவையான போஜனத்தை அவளே செய்கிறது என்ற தீர்மானத்தின் மேலேயே அவர்கள் பாத்திரம் சாமான்கள் முதலியவைகளைக் கும்பகோணத்தில் இருந்தே கொணர்ந்திருந்தனர். போயி பாத்திரங்களையும் சமையல் அறையையும் சுத்தி செய்து கொடுத்தான். உடனே விசாலாகூஜியம்மாள் நீராடி சமையல் செய்யத் துவக்கினாள். மற்றவரில் சிலர் நீராடினர்; சிலர் பல்தேய்த்து முகம், கைகால்களை மாத்திரம் சுத்தி செய்து கொண்டனர். ரமாமணியின் தகப்பனார் அருகில் இருந்த காப்பிக் கடைக்குப் போய் சிற்றுண்டிகள், காப்பி முதலியவற்றை ஏராளமாக வாங்கிக் கொணர்ந்து வைத்து, சமையல் ஆவதற்கு அதிக நேரம் பிடிக்கும் ஆதலால், அதற்குள் எல்லோரும் சிற்றுண்டி உண்டு காப்பி பருகுமாறு கேட்டுக் கொள்ள, நீலலோசனியம்மாளைத் தவிர மற்ற எல்லோரும் திருப்திகரமாய் உண்டு ஆங்காங்கு படுத்துக் கொண்டனர். முதல் நாள் இரவு முழுதும் எவரும் தூங்காமலேயே இருந்தவர் ஆதலால், எல்லோரும் அப்படியப்படியே சுவாரஸ்யமாகத் துக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். விசாலாகூஜியம்மாள் மாத்திரம் தூங்காமல் சமையல் செய்து கொண்டிருந்தாள். நமது நீர்மேல்குமிழி நீல லோசனியம்மாள் சிற்றுண்டி உண்ணாமலும், தூங்காமலும் இருந்ததன்றி, தான் சமுத்திரத்திற்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாக விசாலாகூஜியம்மாளிடம் சொல்லிவிட்டு,