பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மாயா விநோதம் பரதேசி

செய்ய தமயனாருடைய யோசனைகள் நன்றாகவே இருக்கின்றன.

மாசிலாமணி:- அண்ணன் இன்னம் சில யோசனைகளையும் சொல்லி இருக்கிறார். அவைகளையும் நீர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இடும்பன் சேர்வைகாரன்: அவர்கள் எந்த விஷயத்தில் யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள்?

மாசிலாமணி:- இன்னமும் நாம் செய்ய வேண்டிய மூன்றாவது காரியம் ஒன்று பாக்கி இருக்கிறதல்லவா. கடவுள் செயலாலும் முக்கியமாக உம்முடைய திறமையினாலும் சாமியார் காரியமும் மனோன்மணியின் காரியமும் நமக்கு அனுகூலமாக முடிந்து விட்டன. இனி மற்றவர்கள் இருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் விஷயத்தில் எப்படிப் பழி தீர்த்துக் கொள்ளுகிறது என்பதைப் பற்றித்தான் அண்ணன் சில யோசனைகள் சொன்னார்.

இடும்பன் சேர்வைகாரன்:- அவர்கள் எல்லோரும் நிச்சயதார்த்தத்துக்காக ஒன்றாகச் சேர்ந்து பட்டணம் போகும் போது, ஏதாவது உபாயம் தேடி அவர்கள் எல்லோரையும் ஒரேயடியாகத் தொலைத்துவிட வேண்டும் என்று நீங்கள் முன் தடவையில் சொன்னீர்களே! ரயில் தண்டவாளத்தைப் பெயர்க்கும் யோசனையைப் பற்றி நீங்கள் உங்கள் தமயனாரோடு கலந்து பேசினீர்களா?

:மாசிலாமணி':- ஆம்; சொன்னேன். நம்முடைய யோசனைகளை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கண்ணப்பா, வடிவாம்பாள் முதலிய எல்லோரையும் கொன்று விடுவது அவருக்கு அவ்வளவு உசிதமான காரியமாய்த் தோன்றவில்லை. ஒருவரை நாம் தண்டிக்க எண்ணினால் அவரை நாம் கொல்வது தண்டனையே அல்ல. இன்ன குற்றத்திற்காகத் தாம் உயிரை இழக்கிறோம் என்பது அவருக்குத் தெரியவே போகிறதில்லை. ஒருவரை நாம் திடீரென்று கொன்று விட்டால், அதனால் அவர் யாதொரு துன்பமும் அனுபவிக்கப் போகிறதில்லை ஆகையால், மனிதரை உயிரோடு வைத்து, அவர்கள் பலவிதமான துன்பங்களை