பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

47

"இப்பிறவி என்னும் ஓர் இருள்கடலில் மூழ்கி, "நான்"
என்னும் ஒரு மகர வாய்ப்பாட்டு
இருவினை யெனும் திரையில் எற்றுண்டு புற்புத
மெனக் கொங்கை வரிசை காட்டும்
துப்பிதழ் மடந்தையர் மயற் சண்டமாருதச்
சுழல்வந்து வந்தடிப்பச்
சேராத ஆசையாம் கான் ஆறு வான் நதி
கரந்த தென மேலும் ஆர்ப்பக்
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
கைவிட்டு மதிமயங்கிக்
கள்ளவங்கக் காலர் வருவரென்றஞ்சியே
கண்ணருவி காட்டுமெளியேன்
செப்பரிய முத்தியாங் கரை சேரவுங் கருணை
செய்வையோ! ஸத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தேஜோ மயாநந்தமே"

என்று மறுமைப் பேரின்பத்தைத் தேடுகிறவர்கள். இத்தகைய மனப்பான்மையுடைய நம்மவர் நமது நூல்களைப் படித்து உலக வாழ்க்கையின் உண்மையான யோக்கியதை இவ்வளவுதான் என்று கண்டு, மெய்யறிவு பெற்று, ஆசையே துக்கம், நிராசையே சுகம் என்ற உண்மையை அனுபவத்தில் கடைப்பிடித்து வருவதைக் கெடுத்து, இங்கிலீஷ்காரர் தமது கொள்கைகளையும் மனப்போக்கையும் தமது கல்வியின் மூலமாக நம்மவர் மனத்தில் தொற்றவைத்து, நம்மை எப்படிப்பட்ட துன்பங்களில் ஆழ்த்து கின்றனர்! ஆண்மக்கள் தான் இப்படிப்பட்ட விலக்க முடியாத பெருத்த தொற்றுவியாதியில் அகப்பட்டுக்கொண்டு விடுபட வழி இன்றித் தவிக்கிறார்கள் என்றால், நம்முடைய ஸ்திரீகளும் அவர் களுடைய கல்வியைக் கற்று வெகு சீக்கிரத்தில் அதே நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள் போலத் தோன்றுகிறதே! ஆண்பிள்ளைகள் உலக விவகாரங்களைக் கற்று வீட்டைவிட்டு வெளியேறி ஏதாகிலும் ஒரு ஜீவனோபாயத்தை நாடிப் பொருள் தேடித் தமது குடும்பத்தை சவரக்ஷிப்பது இயற்கையே! ஸ்திரீகளும் வெளியேறி ஆண்பிள்ளைகளோடு இரண்டறக்