பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

69

பங்களாவிற்குப் போனதாக நினைவிருப்பதுகூடக் கனவின் காட்சியா? என்ன விநோதம் இது! என்ன ஜால வித்தை இது! எல்லாம் ஒரே குளறுபடியாக அல்லவா தோன்றுகிறது" என்று கந்தசாமி பலவாறு சிந்தனை செய்தவனாய்க் கீழே குனிந்து தனது உடம்பைப் பார்த்துக் கொண்டான். தான் பெண் உடையில் அப்போதும் இருந்ததை அவன் பார்த்து, தான் மனோன்மணியிடம் பெண் வேஷத்தோடு போனது நிஜம் என்று அவன் உறுதி செய்து கொண்டான். ஆனாலும், அப்படிப்பட்ட இடமாறுபாடு ஏற்பட்டது எப்படி என்பதையும், அப்படி அவர்கள் செய்வதன் நோக்கம் என்ன என்பதையும் உணர்ந்து கொள்ள மாட்டாதவனாய் மறுபடி கட்டிலின் மீது உட்கார்ந்து ஒய்ந்து திண்டில் சாய்ந்து கொண்டான்.

அவ்வாறு அரைநாழிகை காலம் சென்றது. சடேரென்று ஒர் ஓசை கதவின் பக்கத்தில் உண்டாயிற்று. கந்தசாமி திடுக்கிட்டு எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து ஒசை வந்த திக்கில் தனது பார்வையைச் செலுத்தினான். அடுத்த நிமிஷம் கதவு மெதுவாகத் திறந்து கொண்டதைக் கண்ட கந்தசாமி சற்று முன் உண்டான ஓசை யாரோ கதவைத் திறந்ததால் ஏற்பட்ட ஓசை என்று யூகித்துக் கொண்டு யார் வரப்போகிறார்கள் என்று ஆவலோடு உற்று நோக்கினான். பட்டாபிராம பிள்ளை தனது உண்மையை எவ்வளவு தூரம் கண்டு கொண்டிருக்கிறார் என்பதும், தன்னை அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதும் உடனே தெரிந்து போகும் என்ற எண்ணம் அவனது மனதில் அதே கூடிணத்தில் உதித்தது. ஆகையால், அவனது மனதும் உடம்பும் துடிதுடித்து ஆவலே வடிவாகவும் சஞ்சலமே நிறைவாகவும் காணப்பட்டன. அப்போது ஒரு கிழவி ஒரு கையில் ஒரு பெரிய தாம்பாளத்தை யும், இன்னொரு கையில் ஒரு கூஜாவையும் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். தாம்பாளத்தில் பலவகைப்பட்ட சிற்றுண்டிகளும், கூஜாவில் பாலும் இருந்தன என்பது எளிதில் யூகித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அவைகளை எடுத்து வந்தவள் ஒரு வேலைக்காரி என்பதும் அவளது ஏழ்மையான தோற்றத்தில் இருந்து கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த