பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மாயா விநோதப் பரதேசி

எடுத்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மை அப்போதே அவனுக்குப் புலப்பட்டது. முதல் நாள் இரவில் தான் தூங்கிக் கொண்டிருந்த காலத்தில் யாரோ சில முரடர்கள் திடீரென்று உள்ளே நுழைந்ததாகத் தனக்கு உண்டான ஞாபகத்தை, தான் கனவின் உணர்ச்சி என்று எண்ணியது தவறென்றும், மனோன்மணியம்மாளை அபகரித்துச் செல்வதற்கு முரட்டாள்கள் வந்தபோது தான் விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவன் நிச்சயித்துக் கொண்டு அவர்கள் கூறிய வார்த்தைகளை எல்லாம் ஞாபகத்திற்குக் கொண்டுவர முயன்றான். முரட்டு மனிதர்களுள் ஒருவன் மற்றவர்களை நோக்கி, "மனோன்மணி யம்மாள் அதோ இருக்கிறாள். அவள் விழித்துக் கொண்டு கூச்சலிட்டாலும் பாதகமில்லை. கீழே இருப்பவர்கள் எல்லாம் அப்படி இப்படி அசைய முடியாமலும் கூச்சலிட முடியாமலும் கட்டிப் போட்டிருக்கிறோம். சீசாவைப் பெண்ணின் மூக்கில் பிடியுங்கள்" என்று கூறிய வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக கந்தசாமியின் நினைவிற்கு வந்தன. அவற்றின் கருத்து அப்போதே அவனுக்குச் சந்தேகமற விளங்கியது. தன்னை அவர்கள் துக்கி எடுத்துக் கொண்டு வேறே பங்களாவிற்குக் கொணர்ந்து படுக்க வைத்த விவரம் எதுவும் தனக்குச் சுத்தமாகத் தெரியாமல் போனதற்குக் காரணம் அவர்கள் ஏதோ மயக்க மருந்துள்ள ஒரு சீசாவைத் தனது மூக்கில் பிடித்து, தான் ஸ்மரணை தப்பிப் போகும்படி செய்ததே என்பது நிச்சயப்பட்டது. வேலைக்காரி தனக்கு அப்போது சரியானபடி மயக்கம் தெளியவில்லை என்று கூறியதும், அவர்கள் மயக்க மருந்தை உபயோகித்தார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது, தான் பெண் வேஷந்தரித்து, மனோன்மணி அம்மாளைப் பார்த்து அவளுடன் சம்பாஷித்து அவளது குணாதிசயங்களை அறிய வேண்டும் என்று வந்த தினமும், அந்த முரட்டு மனிதர்கள் அவளை அபகரித்துப் போக வந்த தினமும் ஒத்துக் கொண்டது! அவனுக்குப் பெருத்த ஆச்சரியமாகத் தோன்றியது. ஆனாலும், மனோன்மணிக்குப் பதிலாக தான் அகப்பட்டுக் கொண்டதைப் பற்றி அவன் சிறிதும் வருந்தவில்லை. அபலையான மனோன்மணியம்மாளுக்கு அத்தகைய அபாயம் நேராமல்