பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

81

தேடிப்பிடிக்க முயற்சி செய்யாமல் இருக்க விரும்ப மாட்டான். நான் உண்மையில் கந்தசாமி என்பதைப் பட்டாபிராம பிள்ளை முதலியோரிடம் வெளியிட்டால்தான், என்னைத் தேடுவதற்கு, அவர்களுக்கு உண்மையான அக்கறை பிறக்கும் என்று அவன் நினைப்பது சகஜமே. நான் பெண் வேஷந் தரித்து வந்தேன் என்பதை வெளியிடுவது வெட்கக்கேடான விஷயம் என்றும் அவன் நினைப்பான். இப்படிப்பட்ட தர்மசங்கட நிலைமையில் அவன் எப்படித்தான் நடந்து கொள்வானோ தெரியவில்லை. எங்களோடு வந்த வேலைக்காரப் பெண்ணோ , புதிதாக இதற்கென்றே பிரத்தியேகமாய் அமர்த்திக் கொண்டு வரப்பட்ட கூலிக்காரி. ஆகையால், அவளைப் போலீசார் எவ்வளவுதான் வதைத்துக் கொன்றாலும், அவள் தனக்கு எந்த விவரமும் தெரியாது என்று சொல்ல முடியுமேயன்றி, வேறே எதையும் சொல்ல முடியாது. கோபாலசாமி என் சொல்லின்படி நடந்ததால், அவனுக்கு என்னால் இப்படிப்பட்ட பெருத்த உபத்திரவமும் அவமானமும் ஏற்பட்டு விட்டன. அதைப்பற்றித் தான் என் மனம் வருந்துகிறது. நாங்கள் ரகசியத்தில் செய்த சூழ்ச்சியின் வரலாற்றை அவன் வெளியிட்டு விட்டால்கூட, அதைப்பற்றி நான் அவன் மேல் வருத்தப்படவே நியாயமில்லை. இத்தனை ஏற்பாடுகள் செய்து இவர்கள் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்! இவர்களுடைய இருப்பிடத்தை போலீசார் கண்டு கொள்ளும்படி இவர்கள் அசட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதுவுமன்றி, இவர்கள் மனோன்மணியம்மாளை அபகரிக்க வந்து ஆள் மாறாட்டமாக என்னைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள் என்ற உள்மர்மமும் பட்டாபிராம பிள்ளை, கோபால்சாமி முதலி யோர்க்குத் தெரிய நியாயமில்லை. அந்த பங்களாவில் இரண்டு பெண்கள் இருக்கையில், மனோன்மணியம்மாளை விட்டு விருந்தாளியாக வந்தவளை இவர்கள் எடுத்துப் போனது எதற்காக என்று அவர்கள் யோசித்துப் பார்ப்பார்கள். எவ்வளவு தான் யோசித்துப் பார்த்தாலும், இவர்களுடைய உள்கருத்து அவர்களுக்குத் தெரியும் எனத் தோன்றவில்லை" என்று கந்தசாமி நினைத்துப் பலவாறு சிந்தனை - செய்து கொண்டிருந்த பா.வி.ப.11-6