பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 101 பதிலாக ரமாமணியம்மாள் முதலியோர் அகப் பட்டுக் கொள்ளும்படி செய்திருக்க வேண்டும் என்ற நினைவே முக்கியமாகத் தோன்றியது. அந்தப் பெண் கடைசிவரையில் பொய்யான வரலாறுகளைக் கூறித் தன்னை முற்றிலும் ஏமாற்றி விட்டாள் என்ற விஷயமும் அவனது மனத்தில் நன்றாகப்பட்டது. "ஆகா! என்ன என்னுடைய அதிர்ஷ்டம்! நான் முன்பு வடிவாம் பாளைக் கொணர்ந்து கலியாணம் செய்து கொள்ள எத்தனித்த காலத்தில், அவள் சுமார் லட்சம் ரூபாய் பெறத்தக்க ஆடையாபர ணங்கயோடு எதிரியிடம் போய்ச் சேர்ந்தாள். அது போலவே இந்தப் பெண்ணும், போகும் போது சுமார் லட்சம் ரூபாய்க்கு மேல் பெறத்தக்க ஆடையாபரணங்களை அபகரித்துக் கொண்டு போனதோடு என்னுடைய முக்கியமான ரகசியத்தையும் தெரிந்து கொண்டு போய், நான் செய்த சதியாலோசனை எனக்கே வந்து வாய்க்கும்படி செய்து விட்டாளே! ஆகா! என்ன ஆச்சரியம் இது: இந்தப் பெண் யாராக இருப்பாள் இவள் நம்முடைய பகை வருக்கு வேண்டிய மனுவியா, அல்லது, அவர்களுக்கு விரோதி யான மனுவியா என்பதுகூடத் தெரியவில்லையே" என்று மாசிலாமணி பலவாறு எண்ணமிட்டுத் தத்தளித்திருக்க, மறு நாளாகிய செவ்வாய்க் கிழமையும் அவனுக்கு நரகவேதனையாகக் கழிந்தது. அன்றைய தினம் அவன் நிரம்பவும் களைத்துப் போன மையால் படுக்கையில் இருந்தபடியே சொற்ப ஆகாரம் தருவித்து உட்கொண்டான். மறுநாளாகிய புதன்கிழமை காலையில் அவனுக்கு வழக்கப்படி தபால்கள் வந்தன. அவன் மிகுந்த ஆவலோடு, சென்னையில் இருந்து வந்த பத்திரிகைகளைப் பிரித்துப் படித்தான். புதிய விசேஷம் எதுவும் காணப்படவில்லை. உடனே அவன் கடிதங் களைப் பிரித்துப் படித்தான். ஒரே ஒரு கடிதம் சென்னை முத்திரை யோடு வந்திருந்தது. மற்றவைகளை அவன் அலட்சியமாகப் படித்துப் போட்டுவிட்டு சென்னையில் இருந்து வந்த கடிதத்தை மாத்திரம் மிகுந்த ஆவலோடும் படபடப்போடும் பிரித்துப் படித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: அவசரம்