பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மாயா விநோதப் பரதேசி ம-ா-ா-பூரீ மாசிலாமணிப் பிள்ளை அவர்களுக்கு, நண்பன் இடும்பன் சேர்வைகாரன் அநேக நமஸ்காரம் செய்து எழுதும் விக்ஞாபனம். நானும் ரமாமணியம்மாள் முதலியோரும் பட்டணம் வந்து ராமசாமி முதலியார் சத்திரத்தில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ரயிலில் பழக்கமான ஒர் அம்மாளும் எங்களுடன் தங்கி இருந்தாள். அந்த அம்மாள் தன்னுடைய கையில் அழகான வைர மோதிரம் ஒன்று போட்டிருந்தாள். அது இரவில் அந்த அம்மாளுடைய கை விரலிலிருந்து நழுவி தரையில் வெகு துரத்திற்கப்பால் வந்து கிடந்தது: ஒன்றுக்கு எழுந்து போன நான் அதைக் கண்டு எடுத்துப் - பார்த்தேன். அது கீழே கிடந்ததாகையால், அதை நானே எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு மூட எண்ணம் தோன்றியது. காலையில் அவர்கள் தேடிப் பார்க்கும் போது என் மேல் சந்தேகம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்த, நான் அந்த மோதிரத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டேன். பிறகு அந்த அம்மாள் விழித்துக் கொண்டு மோதிரத்தைக் காணோம் என்று கூச்சலிட போலீசார் வந்து எங்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் இருந்த எக்ஸ்ரே என்ற யந்திரத்தை வைத்துப் பார்த்து, என் வயிற்றில் மோதிரம் இருந்ததைக் கண்டு என்னை சப் ஜெயிலில் அடைத்து விட்டார்கள். இப்போது நான் அங்கே தான் இருக்கிறேன். வெள்ளிக்கிழமை இரவில் நாம் செய்ய உத்தேசித்த காரியத்தை நான் இல்லாமலேயே என்னுடைய ஆள்கள் நடத்தி விட்டதாகவும், முடிவில் அவர்கள் அகப்பட்டுக் கொண்டு சப் ஜெயிலில் வேறோர் இடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. நம்முடைய ஆள்களைப் போலீசார் அடித்து வருத்தியதில் அவர்கள் ஏதோ சொற்ப தகவலை மாத்திரம் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. அதை வைத்துக் கொண்டு போலீசார் என்னையும் அதில் சம்பந்தப்படுத்தவும், எனக்கும் உங் களுக்கும் சிநேகம் என்றும், நீங்களே எல்லா விஷயங்களையும் செய்ய எங்களை அனுப்பி இருக்கிறீர்கள் என்றும் ருஜூப் படுத்துவதற்காகவும் பலவகையில் பிரயத்தனங்களும் தந்திரங்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று காலையில் போலீசார் என்னிடம் வந்து என்னை பயமுறுத்தி, நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கும்படி செய்து அதை