பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #03 வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். என்னை மீட்பதற்காக பதினைந்து ஆயிரம் ரூபாயோடு நீங்கள் நேரில் உடனே புறப்பட்டு இங்கே வரவேண்டும் என்றும், அல்லது, கடிதம் கொண்டு வரும் மனிதரிடம் பணத்தையாவது அனுப்ப வேண்டும் என்றும் நான் எழுதும்படி கட்டாயப்படுத்தி அதை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு யாராவது உங்களிடம் வருவார்கள். நீங்கள் எவ்வித பிடியும் கொடாமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங் கள். நீங்கள் உடனே பட்டணம் வந்தாலும், அல்லது, பணம் அனுப்பி னாலும், அதைக் கொண்டு உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறதென்பதை ருஜூப்படுத்த அவர்கள் உத்தேசிக்கிறார்கள். ஆகையால், நீங்கள் சென்னைக்கு வரவும் வேண்டாம்; பணம் அனுப்பவும் வேண்டாம்; "அடேய் இடும்பன் சேர்வைகாரா! திருட்டு நாயே! உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை சென்னைக்கு வரும்படி அழைக்க உனக்கு அவ்வளவு துணிவா? உனக்காகப் பதினையாயிரம் ரூபாய் செலவு செய்து உன்னை மீட்க, எனக்கு என்ன அக்கறை வந்திருக்கிறது. நீ கொழுப் பெடுத்துப் போய் திருடினால், அதற்கு நானா பிணை. நீ எக்கேடு கெட்டு எருக்கு முளைத்துப்போ. இனி மேல் நீ இப்படிப்பட்ட கடிதங்களை எனக்கு அனுப்பினால், உனக்குத் தக்க சிகூைடி நடத்தி வைப்பேன். ஜாக்கிரதை' என்று நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த மனிதரிடம் கொடுத்து அனுப்பி விடுங்கள். - ஆனால், அவனை அனுப்பிய பின் நீங்கள் அது போல நடந்து என்னைக் கை விடாதீர்கள். போலீசாருக்குத் தெரியாமல் நீங்கள் உடனே நேரில் வந்தோ, ஆள்களை அனுப்பியோ, என்னைத் தப்ப வைக்க, வழி தேடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகி றேன். ஏதோ அற்ப புத்தியால் நான் இந்தத் தவறைச் செய்து போலீசாரிடம் அகப்பட்டுக் கொண்டேன். நான் இது வரையில் உங்களுக்குச் செய்துள்ள உதவிகளை நினைத்து இந்தச் சந்தர்ப் பத்தில் நீங்கள் என்னைக் கைவிடாமல் காப்பாற்ற வேண்டுகிறேன். இங்கேயுள்ள பாராக்காரன் யோக்கியமான மனிதன். அவனு டைய உதவியால், நான் இந்தக் கடிதத்தை தபால் மூலமாக உங்களுக்கு அனுப்புகிறேன். அவனுக்கு ரூபாய் 100 தருவதாகச்