பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 மாயா விநோதப் பரதேசி சொல்லி இருக்கிறேன். உங்கள் பணம் வந்து தான் கொடுக்க வேண்டும். மற்ற விஷயங்களை மறுபடி எழுதுகிறேன். இந்த அபாய காலத்தில் இந்த ஏழையைக் கைவிடாமல் காப்பாற்றும்படி உங்கள் காலுக்கு ஆயிரம் கும்பிடு போட்டு வேண்டிக் கொள்ளும், உங்கள் அடிமை, இடும்பன் சேர்வைகாரன். என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த மாசிலாமணி பெருத்த திகிலும் கலவரமும் அடைந்து கலகலத்துப் போனான். "ஆகா இங்கே வந்த பெண் என்னுடைய ரகசியத்தைப் போலீசாரிடம் தெரிவித்து விட்டாள் போலிருக்கிறதே! அதன் மேல் அவர்கள் என்னை அதில் சம்பந்தப்படுத்தும் பொருட்டு ஏதேதோ தந்திரம் எல்லாம் செய்கிறார்கள் போலிருக்கிறதே! ஆகா! அவளைக் கொணர்ந்தது பெருத்த உபத்திரவத்தில் அல்லவா கொண்டு போய் விட்டிருக்கிறது. இடும்பன் சேர்வைகாரனுடைய ஆள்களையும் பிடித்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறதே! அவர்கள் என்னென்ன விஷயங்களை வெளியிட்டு விட்டார்களோ தெரிய வில்லையே. ஆனால், நல்ல வேளையாக இடும்பன் சேர்வைகாரன் முன்னாக இந்தக் கடிதம் என்னிடம் வந்து சேரும்படி செய்து என்னை எச்சரித்தான். இந்த எழுத்து இடும்பன் சேர்வை காரனுடைய எழுத்தாகத்தான் இருக்கிறது. இது அவனால் அனுப்பப்பட்டதென்பதைப்பற்றி சந்தேகமில்லை. போலிஸ்காரன் வரட்டும் இடும்பன் சேர்வைகாரன் எழுதி இருப்பது போலவே நடந்து கொள்ளுகிறேன். போன இடத்தில் இந்த இடும்பன் சேர்வைகாரனுக்கு அந்த மோதிரத்தைப் பார்த்தவுடன் புத்தி அற்ப புத்தியாய்ப் போனதை என்னவென்று சொல்லுகிறது" என்று தனக்குள் பலவாறு எண்ணமிட்டவனாய் இருந்த காலத்தில், வேலைக்காரன் தோன்றி சென்னையில் இருந்து கடிதத்தோடு ஒருவர் வந்திருப்பதாகவும், அவர் நேரில் வந்து பார்த்துப் பேச விரும்புவதாகவும் கூறினான். அதைக் கேட்ட மாசிலாமணியின் மனம் நிரம்பவும் சஞ்சலம் அடைந்தது. வந்திருப்பவன் எவ்விதமான மோசக் கருத்தோடு வந்திருக்கிறானோ என்றும், அவனிடம் நிரம்பவும் ஜாக்கிரதையாக