பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 405 இருக்க வேண்டும் என்றும் மாசிலாமணி தீர்மானித்துக் கொண் டான். இடும்பன் சேர்வைகாரன் முன்னாகவே தன்னை எச்சரித் திருந்தாலும், போலீஸ்காரன் தன்னை எப்படி ஏமாற்ற எண்ணி வந்திருக்கிறானோ என்று நினைத்து இன்னதென்று விவரிக்க இய லாத ஒருவித வேதனை அடைந்தவனாய் அவனை அழைத்து வரும்படி வேலைக்காரனை அனுப்பினான். அவன் வெளியில் போய் ஐந்து நிமிஷ நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்தான். சென்னையில் இருந்து கடிதம் கொணர்ந்திருந்த மனிதனும் அவனோடு கூட வந்து சேர்ந்தான். அவனை மாசிலாமணி இருந்த விடுதிக்குள் அனுப்பியவுடன் வேலைக்காரன் வெளியில் போய்விட்டான். உள்ளே வந்த மனிதனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம். அவன் சுத்தமான ஆடைகள் தரித்திருந்தான் ஆனாலும் அவன் சாதாரண வேலைக்காரன் என்பது அவனது பணிவான நடத்தையில் இருந்து வெளியாயிற்று. அவன் மாசிலாமணியை நோக்கிக் குனிந்து வணங்கி, "ஐயா! நமஸ்காரம்! நீங்கள் தானே மாசிலாமணிப் பிள்ளை என்பது!" என்று நிரம்பவும் விநயமாகக் கேட்க மாசிலாமணி, விஷயம் ஒன்றையும் அறியாத வன் போல நடிக்கத் தொடங்கி, அந்த மனிதனை ஏற இறங்க இரண்டு தடவை உற்றுப்பார்த்து, "ஆம், நான்தான் மாசிலா மணிப்பிள்ளை; என்ன விசேஷம்? நீர் எங்கே இருந்து வருகிறீர்?" என்று அமர்த்தலாக வினவினான். அந்த மனிதன், "நான் சென்னப்பட்டணத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே வந்திருக்கும் உங்களுடைய சிநேகிதர் ஒருவர் உங்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பி இருக்கிறார்" என்றான். மாசிலாமணி மிகுந்த வியப்படைந்தவன் போல நடித்து, "சென்னப்பட்டணத்திற்கு என்னுடைய சிநேகிதர் யார் வந்திருக்கி றார்கள்? அவருடைய பெயரென்ன?" என்றான். பட்டணத்தான்:- அவருடைய பெயர் இடும்பன் சேர்வைகாரராம். மாசிலாமணி:- (மிகுந்த ஆச்சரியமும் கோபமும் அடைந்து) யார்? யார்? இடும்பன் சேர்வைகாரரா? எனக்கு அந்தப்