பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாயா விநோதப் பரதேசி பெயருடைய சிநேகிதர் யாருமில்லையே! இந்தக் கடிதம் எனக்கு எழுதப்பட்டிருக்காது. வேறே யாருக்காவது எழுதப்பட்டிருக்கும். நீர் தப்பாக இதை என்னிடம் கொண்டு வந்திருக்கிறீர். பட்டணத்தான்:- இல்லை இல்லை. கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள வக்கீல் சட்டைநாத பிள்ளையினுடைய சகோதரர் மாசிலாமணிப் பிள்ளை என்று இந்தக் கடிதத்தில் மேல் விலாசம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து என்னை அனுப்பியவரும் அந்த விலாசத்தைத் தான் சொன்னார். நான் இந்த ஊருக்கு வந்து விசாரித்ததில் அந்த மேல் விலாசத்தில் குறிக்கப்பட்டுள்ள மனிதர் நீங்கள் தான் என்று என்னை இங்கே அனுப்பினார்கள். ஆகையால், அந்தச் சேர்வைகாரர். உங்களுக்குத் தான் இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கிறார் போலிருக்கிறது. இதை வாங்கித் தான் பாருங்களேன்" என்று கூறிய வண்ணம் தனது சட்டைப் பையில் இருந்த கடிதத்தை எடுத்து மரியாதை யாகக் குனிந்து மாசிலாமணியிடம் கொடுத்தான். நிரம்பவும் அசட்டையாகவும் அலட்சியமாகவும் கடிதத்தை வாங்கி, மாசிலா மணி அதை உடனே பிரித்துப் படிக்க ஆவல் கொள்ளாதவன் போல நடித்து அந்த மேல் விலாசத்தின் எழுத்தை உற்றுக் கவனித்து, "இந்த எழுத்து இன்னாருடைய தென்ற அடையாளமே தெரியவில்லையே. இந்த மேல் விலாசம் நீர் குறிக்கும் இடும்பன் சேர்வைகாரரால்தான் எழுதப்பட்டதா? அவர் இதை எழுதிய போது நீர் பார்த்திரா? - என்றான். பட்டணத்தான்:- இந்த மேல் விலாசம் அந்த இடும்பன் சேர்வை காரரால் எழுதப்பட்டதோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. . மாசிலாமணி:- அந்த இடும்பன் சேர்வைகாரருக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்? நீர் அவருடைய சிநேகிதரா? பட்டனத்தான்:- அவருக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. இந்தக் கடிதம் என்னிடம் எப்படி வந்ததென்பதை நான் விவரமாகச் சொல்லு கிறேன். நான் ஒரு சாயப்புவினிடம் குமாஸ்தாவாக இருக்கிறேன்.