பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 107 அந்த சாயப்புவின் பெயர் ஜானிஜான் கான் சாயப்பு என்பது. அவர் ஒரு பெரிய கம்பெனியில் கஜான்சி உத்தியோகம் பார்க்கிறவர். அந்தக் கம்பெனியைச் சேர்ந்த பொக்கிஷத்தில் பெருத்த பணத்தொகை குறைவுபட்டதாம். கம்பெனியார் சாயப்புவின் மேல் சந்தேகங்கொண்டு அவரைப் பிடித்து இரண்டு தினங்களுக்கு முன் சிறைச்சாலையில் வைத்தார்கள். அவர் ஜாமீன் கொடுத்து விடுதலை பெற்று நேற்று வீடு வந்து சேர்ந்தார். சிறைச் சாலையில் அவர் இருந்த அறையில் இந்த இடும்பன் சேர்வை காரர் ஏதோ குற்றங்களுக்காக அடைபட்டிருக்கிறாராம். அவ் விடத்தில் என் எஜமானருக்கும் சேர்வைகாரருக்கும் பரிச்சயம் ஆனதாம். இந்தக் கடிதத்தை உங்களிடம் சேர்த்து விடும்படி சேர்வைகாரர் எங்கள் எஜமானிடம் இதைக் கொடுத்து நிரம்பவும் வேண்டிக் கொண்டாராம். ஆகையால், என் எஜமானர் தம்முடைய கையில் இருந்து என் வழிச் செலவுக்குப் பணம் கொடுத்து என்னை அனுப்பினார். ខ្វល់លនានា தான் எனக்குத் தெரியும், நான் அந்த இடும்பன் சேர்வைகாரரை நேரில் பார்த்தது மில்லை. இந்தக் கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்பதும், அல்லது, இதில் அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் இதைப் பிரித்துப் பார்த்து, ஏதாவது பதில் எழுதிக் கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு நான் ஊருக்குத் திரும்பிப் போகிறேன் - என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான். மாசிலாமணி:- (மிகுந்த ஆத்திரமும் வியப்பும் காட்டி) என்ன ஆச்சரியம் இது இந்தக் கடிதத்தில் இருப்பது என்னுடைய மேல் விலாசமாகத் தான் இருக்கிறது. ஆனால், அந்த இடும்பன் சேர்வை காரன் இன்னார் என்பது எனக்கு விளங்கவில்லை. அதுவுமன்றி சிறைச்சாலையில் இருப்பதாகச் சொல்லும் அந்த மனிதர் எனக்கு என்ன விஷயம் எழுதி இருக்கப் போகிறார் என்பதும் புலப்பட வில்லை - இருக்கட்டும். மேல் விலாசம் என்னுடையதாக இருப்பதனால், நான் இதைப் பிரித்துப் பார்ப்பதில் கெடுதல் ஒன்று மில்லை - என்று கூறிய வண்ணம் கடிதத்தின் உறையைக் கிழித்து அதற்குள் இருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்துத் தன் மனதிற் குள்ளாகவே படிக்கத் தொடங்கினான். அதற்கு முன் இடும்பன்