பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 மாயா விநோதப் பரதேசி சேர்வைகாரனிடத்தில் இருந்து தபாலில் வந்த கடிதத்தில் கண்டிருந்தபடியே அதுவும் எழுதப்பட்டிருந்தது. அபாண்டமாகத் தன்மேல் ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், மாசிலா மணி உடனே பதினையாயிரம் ரூபாயோடு புறப்பட்டுப் பட்டணம் வரவேண்டும் என்றும், வரமுடியாவிட்டால், பணத்தை அந்த ஆள்வசம் கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் எழுதப் பட்டிருந்ததை மாசிலாமணி படித்த போது, முதலில் வந்த கடிதத்திற்கும் அந்த இரண்டாவது கடிதத்திற்கும் முக்கியமான ஒரு பேதம் காணப்பட்டது. முதலில் வந்த கடிதத்தில் இடும்பன் சேர்வைகாரன், கீழே கழன்று விழுந்து கிடந்த மோதிரத்தைத் தான் எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டதாகவும், தான் ஏதோ புத்திப் பிசகினால் அந்தத் திருட்டைச் செய்து விட்டதாகவும் ஒப்புக் கொண்டிருக்க, இரண்டாவது கடிதத்தில், அந்தத் திருட்டு தன் மேல் அபாண்டமாகச் சுமத்தப்பட்டிருப்பதாக அவன் எழுதி இருந்ததான முக்கியமான வேறுபாட்டை மாசிலாமணி கவனித்தான். அதற்கு உடனே அவனது மனதில் ஒரு சமாதானம் உண்டாகிவிட்டது. தபாலில் வந்த கடிதத்தை இடும்பன் சேர்வை காரன் தனியாக இருந்து எழுதியிருப்பதனால், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு உண்மையாக எழுதி இருக்க வேண்டும் என்றும், ஆள் மூலமாக அனுப்பப்பட்ட கடிதம் போலீசாரின் வற்புறுத் தலின் மேல் எழுதப்பட்டதாகையால், அவன் அவர்களிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் மறுப்பதைக் கருதி, அது அபாண்டமாகத் தன்மேல் சுமத்தப்பட்டிருப்பதாக எழுதி இருக்கிறான் என்றும் மாசிலாமணி தனக்குத்தானே வியாக்கி யானம் செய்து கொண்டதன்றி, தபாலின் மூலமாக வந்த கடிதத்தின் படியே தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் உடனே தீர்மானித்துக் கொண்டான். அதுவுமன்றி, அந்தக் கடிதத்தைக் கொணர்ந்தவன் சுமார் முப்பது வயதுள்ளவனாயும் செழுமையாக வளர்ந்து பெருத்தவண்ாயும் இருந்ததன்றி, அவனது தலையின் பின்பக்கத்து உரோமம் போலீஸ்காரர் வெட்டி விட்டுக் கொள்வது போல நிரம்பவும் உயரமாக வெட்டிவிடப்பட்டிருந்த தாலும், அவன் போலீஸ் ஜெவான் என்றும், அவன் சொல்லும் ஜானிஜான் கான் சாயப்புவின் வரலாறு முழுதும் கட்டுக்கதை