பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109 என்றும் மாசிலாமணி அந்தக் கடிதத்தைப் படிக்கும் போதே முடிவு கட்டிக்கொண்டான். ஆனால், அவன் முதலில் எழுதப்பட்டிருந்த விஷயத்தைப் படித்து விட்டு, அடியில் புதிதாகச் சேர்த்தெழுதப்பட்டிருந்த செய்தி யைப் படிக்கவே, அவனது முகம் சடேரென்று மாறிப் போயிற்று. சென்னையில் இருந்து அபகரிக்கப்பட்டு வந்தது, பெண் வேஷந் தரித்திருந்த கந்தசாமி என்பதான அத்யாச்சரியகரமான விஷயத்தை அவன் படிக்கவே, அவன் தனது கண்களை நம்பவில்லை. அந்த பாகத்தை அவன் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிப் படித்தான். உடனே அவனது மனதில் இன்னதென்று விவரிக்க இயலாத அநேக எண்ணங்களும், சந்தேகங்களும் ஒரே காலத்தில் குபிரென்று கிளம்பின. கந்தசாமி கடைசி வரையில் பெண் போலவே இருந்து எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண் டிருக்கிறான் என்ற வியப்பும், தனது பகைவனிடத்திலேயே தான் தனது சதியாலோசனையை வெளியிட நேர்ந்ததே என்ற ஏமாற்ற மும் திகிலும் எழுந்து அந்த ஒரு நிமிஷ நேரம் அவன் அடியோடு நிலை கலங்கிப் போகும்படி செய்து விட்டன. சோபன அறையில் போலி மணப் பெண் பேசிய சமத்காரத்தைக் கண்டு, தான் பெருத்த வியப்படைந்து, அவள் ஆணாகப் பிறக்க வேண்டியவள் தவறிப் பெண்ணாக வந்திருக்கிறாள் என்று சொன்னது உண்மையாகவே முடிந்து விட்டதே என்ற நினைவும் தோன்றியது. திடீரென்று அவனது மனத்தில் காட்டாற்று வெள்ளம் போலவும், காட்டுத்தி போலவும் குபிரென்று கிளம்பிய பலவகைப்பட்ட மூர்க்கமான உணர்ச்சிகளால், அவன் தன்னையும் மறந்து, தனக்கு முன்னால் அன்னியன் நிற்கிறான் என்பதையும் மறந்து, "ஆகா! கந்தசாமியா இங்கே வந்தவன் அடாடா மோசம் போனோமே!" என்று வாய் விட்டுக் கூறி, மேலும் ஏதோ சொல்லப் போனவன் அன்னியன் நிற்பதை உணர்ந்து உடனே தன்னை அடக்கிக் கொண்டான். ஆயினும், அவன் தனது வலது கையை ஆட்டி கட்டை விரலை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டான். அவனது முகம் பெருத்த ஏமாற்றம், விசனம் முதலியவற்றை நன்றாகக் காட்டியது. அவனது உடம்பு முறுக்கிக் கொள்கிறது; கை கால்கள் பதறுகின்றன. அவன் வாயைத் திறந்து பேசமாட்டாமல் அபாரமான பிரமிப்படைந்து