பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9 வேலாயுதம் பிள்ளை, "ஓ! போகலாம் வாருங்கள்" என்று கூறிய வண்ணம், முதலாவது இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் வெளியேறும் வழி இருந்த திக்கை நோக்கிச் செல்லலானார். அதை உணர்ந்த பட்டாபிராம பிள்ளை, "அண்ணா! அங்கே இருப்பது முதலாவது இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் போகும் வழி. மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் போவதற்கு இந்தப் பக்கத்தில் வேறே வழி இருக்கிறது. நாம் இப்படியே போக வேண்டும்" என்று நிரம்பவும் பணிவாகக் கூறினார். உடனே வேலாயுதம் பிள்ளை, "நாங்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கி இருக்கிறோம். ஆகையால் நம்மைத் தடுக்க மாட்டார்கள். நாம் முதலாவது இரண்டாவது வகுப்புப் பிரயாணி களின் வழியாகவே போகலாம். அங்கே தான் ஜன நெருக்கம் அதிகமாக இல்லை" என்றார். . பட்டாபிராம பிள்ளை முற்றிலும் வியப்படைந்து, "நீங்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கிவிட்டு மூன்றாவது வகுப்பில் ஏன் வந்தீர்கள்?" என்றார். வேலாயுதம் பிள்ளை, "எல்லாம் கால பலன்; எங்கள் குடும்பத்திற்கே பொதுவாக இப்போது வேளை சரியாக இல்லை. எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நன்மை எதுவும் இப்போது சரியாய்ப் பலிக்கிறதில்லை. முக்கியமாகப் பையன் விஷயத்தைப் பாருங்கள். அவனுக்குக் கலியாணம் நடத்த வேண்டும் என்று நாம் இருதிறத்தாரும் சம்மதித்துச் சகலமான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். அது கைகூடாமல் போன தோடு பையனுக்கே மோசம் வந்திருக்கிறது. அது போலவே எல்லா விஷயமும் நடக்கிறது. மன்னார் குடியில் நாங்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டே வந்தோம். மாயவரம் வந்த வரையில் எங்களுக்கு அந்த வகுப்பில் இடம் கிடைத்தது. மாயவரத்தில் நாங்கள் வண்டிமாறி, மெயில் வண்டியில் ஏறியபோது, முதல் வகுப்பில் இடமே இல்லை. இரண்டாவது வகுப்பில் வண்டிக்கு ஒர் இடமாக இரண்டு வண்டிகளில் இரண்டு இடங்கள் காலி இருந்ததாகத் தெரிந்தது. நல்ல வேளையாக மூன்றாவது வகுப்பு வண்டியில் நாங்கள் அறுவரும் உட்காரு வதற்கு வசதியான இடம் அகப்பட்டது. அதற்குள் வண்டி