பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாயா விநோதப் பரதேசி புறப்படும் சமயம் நெருங்கிவிட்டது. ஆகையால் எந்த இடத்தி லாவது தொற்றிக் கொண்டு பட்டணம் வந்து சேர வேண்டும் என்கிற ஆவலில், அந்த மூன்றாவது வகுப்பு வண்டியில் ஏறிக் கொண்டு வந்து சேர்ந்தோம். இந்தப் பொல்லாத வேளையில் கடவுள் கிருபையால், அந்த இடமாவது கிடைத்ததையே நாம் ஒரு பெருத்த நன்மையாக மதித்துக் கொள்ள வேண்டுமே அன்றி வேறல்ல. வண்டியில் நமக்கு முதல் வகுப்பு இடம் கிடைக்காமல் போனதற்கு, முதல் வகுப்பு வழியாகவாவது நாம் வெளியில் போகலாகாதா?" என்று புன்னகையோடு கூறினார். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, "ஒகோ அப்படியா சங்கதி சரி, வாருங்கள் போவோம்" என்று கூறி அவர்களை நடத்தி அழைத்துக் கொண்டு முதலாவது இரண்டாவது வகுப்பு வாசலின் வழியாக வெளியில் சென்றார். சென்றவர் தமது புதல்வியான மனோன்மணியம்மாள் அவ்விடத்தில் இருக்கிறாளோ என்று நாற் புறங்களிலும் திரும்பிப் பார்த்தார்; அவளாவது தங்களது பெட்டி வண்டியாவது அவ்விடத்தில் காணப்பட்டமையால் அவள் பங்களாவிற்குத் திரும்பி போய்விட்டாள் என்று நிச்சயித்துக் கொண்டவராய், தாம் அமர்த்தியிருந்த மோட்டார் வண்டியில் வேலாயுதம் பிள்ளை முதலியோரை உட்காரவித்துத் தாமும் அவர்களோடு உட்கார்ந்து கொண்டார். வண்டி புறப்பட்டு இடை வழியில் எவ்வித விசேஷ சம்பவமும் இன்றி பத்து நிமிஷ நேரத்தில் கோமளேசுவரன் பேட்டையில் உள்ள வேலாயுதம் பிள்ளையின் மாளிகையை அடைந்தது. அன்றைய தினம் அசுபதினம் ஆதலால், தமது புதிய சம்பந்தி யான பட்டாபிராம பிள்ளை முதன் முதலாகத் தமது கிருகத்திற்கு வருவது வேலாயுதம் பிள்ளையின் மனதிற்குச் சம்மதமில்லை ஆனாலும், வரவேண்டாம் என்று சொல்வது மரியாதைக் குறைவான காரியம் என்று கருதி அவர் மெளனமாகவே இருந்தார். கந்தசாமியின் சமையல்காரி மன்னார்குடியில் இருந்து, வேலா யுதம் பிள்ளையினால் அனுப்பப்பட்டு வந்தவள் ஆதலால், அவள் அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கண்டவுடனே அவர்கள் இன்னார் என்பதை உணர்ந்து கொண்டாள். பட்டாபி