பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11 ராமபிள்ளை அதற்கு முன் அவ்விடத்திற்குப் பல தடவை களில் வந்து போயிருந்தார் ஆதலாலும், அவர் கந்தசாமிக்கு மாமனார் ஆகப் போகிறவர் என்பதை அறிந்து கொண்டிருந்தாள் ஆதலாலும், அவரது அடையாளத்தையும் அவள் உடனே கண்டு கொண் டாள். அவளும், அவளது புருஷனும் தமக்கென்று தனியான ஜாகை ஒன்று வைத்துக் கொண்டிருந்தனர் ஆதலால், அவள் இரவில் படுத்துக் கொள்வதற்கு மாத்திரம் தனது சொந்த ஜாகைக்குப் போவதும், மற்ற காலத்தில் கந்தசாமியின் வீட்டில் இருந்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதுமாய் இருந்து வந்தாள். கந்தசாமி காணாமற் போன தினம் முதல் அவன் எப்போது திரும்பி வருவான் வருவான் என்று அவள் ஆவலோடு அவனது வருகையை எதிர்பார்த்துப் பதைபதைத்து நெருப்புத் தணல்களின் மேல் நிற்பவள் போல அளவிட இயலாத சஞ்சலமும் கலவரமும் விசனமும் அடைந்தவளாய் இருந்து வந்தாள். கந்தசாமி காணாமல் போனதைப்பற்றி, அவள் மன்னார் குடிக்குக் கடிதம் எழுத முயன்ற காலத்தில் பட்டாபிராம பிள்ளை அவ்விடத்திற்கு வந்து, தாம் மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி இருப்பதாகவும், மறுபடி விவரமான கடிதம் அனுப்பப் போவதாகவும் கூறியதைக் கேட்ட பிறகு அவள் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, அது முதல் நிமிஷத்திற்கு நிமிஷம் கந்தசாமியின் வருகையையும் அவனைச் சேர்ந்த மனிதர்களின் வருகையையும் எதிர்பார்த்த வளாய் வேதனைக் கடலில் ஆழ்ந்து தத்தளித்து இருந்தாள். ஆகவே, புதன்கிழமை காலையில் வந்து சேர்ந்த வேலாயுதம் பிள்ளை முதலியோரைக் கண்டவுடன் அவளுக்கு ஆத்திரமும் அழுகையும் பொங்கி எழுந்தமையால், அவள் உடனே கோவெனக் கதறி அழுது,"எஜமானே! குழந்தை அகப்பட்டாரா?" என்று கட்டி லடங்கா ஆவலோடு கேட்க, அவளது உருக்கமும் விசனமும் தொற்று வியாதி போலப் பரவி மற்றவரது மனத்தையும் கப்பிக் கொண்டமையால், வேலாயுதம் பிள்ளையும், அவரைச் சேர்ந்த வர்களும் கலங்கிக் கண்ணிர் விடுத்துத் தேம்பித் தேம்பி அழுதவர்களாய் உள்ளே சென்றனர். பட்டாபிராமபிள்ளை அந்த வேலைக்காரியை நோக்கி நிரம்பவும் அன்பாகப் பேசத் தொடங்கி, "பிள்ளையாண்டான் இன்னம் அகப்படவில்லை அம்மா!