பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாயா விநோதப் பரதேசி அவரைத் தேடிப்பிடிப்பதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றன. சீக்கிரம் அகப்பட்டு விடுவார்" என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு புகைப் படத்தை வெளியில் எடுத்து அந்தச் சமயைல்காரியிடம் நீட்டி "இதைப் பாரம்மா, இதில் இருக்கும் மனிதர் யார் என்பது உனக்குத் தெரியுமா என்று பார்த்துச் சொல்" என்றார். உடனே சமையல்காரி ஆவலோடு அந்தப் படத்தை வாங்கிப் பார்த்து விட்டு, "ஒகோ இது நம்முடைய கோபாலசாமியின் படமல்லவா! இது எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது?" என்றாள். பட்டாபிராம பிள்ளை, "இவருக்கும் உனக்கும் எப்படிப் பழக்கம்?" என்றார். சமையல்காரி, "இவரும் மன்னார் குடியில் இருந்து இந்த ஊரில் வந்து படித்துக் கொண்டிருப்பவர். இங்கே பக்கத்தில் உள்ள சாப்பாட்டுக் கடையில் இவர் சாப்பிட்டுவிட்டு எப்போதும் இங்கே தான் நம்முடைய சின்ன எஜமானரோடு கூடவே படித்துக் கொண்டிருப்பார்: இராத்திரி வேளையிலும் இங்கே தான் படுத்துக் கொள்வார். நம்முடைய சின்ன எஜமானர் காணாமல் போனதற்குப் பிறகு நான் பல தடவை, அந்தச் சாப்பாட்டுக் கடைக்குப் போய் இவரைப் பற்றி விசாரித்தேன். இவர் அங்கே சாப்பாட்டுக்கு வரவே இல்லையம். சோற்றுக் கடைக்காரரும் கவலைப்பட்டு இவரைப் பற்றி விசாரித்தேன். இவர் அங்கே சாப்பாட்டுக்கு வரவே இல்லையாம். சோற்றுக் கடைக்காரரும் கவலைப்பட்டு இவரைப் பற்றி அடிக்கடி என்னிடம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு தான் எங்கேயாவது போயிருக்க வேண்டும். ஆனால், சேர்ந்தாற் போல இத்தனை நாள்கள் வரையில் இவர்கள் இதுவரையில் வீட்டுக்கு வராமல் வெளியில் இருந்ததே இல்லை. இரண்டொரு நாள்கள் எங்கேயாவது போனால், என்னிடம் தகவல் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். இந்தத் தடவை எவ்வித தகவலும் சொல்லாமல் போயிருக்கி றார்கள். எங்கேதான் போயிருப்பார்கள் என்பது தெரியவில் லையே!" என்றாள்.