பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13 பட்டாபிராம பிள்ளை, "கடைசியாக இவர்கள் இருவரும் எப்போது இவ்விடத்தில் சேர்ந்திருந்தார்கள்? போகும் போது இரு வரும் ஒன்றாகவே சேர்ந்து போனார்களா?" என்று வினவினார். சமையல்காரி, "கடைசியாக சனிக்கிழமை காலையில் இவர்கள் இருவரும் இங்கே ஒன்றாக இருந்தார்கள். பத்து மணிக்கெல்லாம் நான் சின்ன எஜமானருக்குச் சாப்பாடு போட்டேன். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகள் கலாசாலையில் ரஜா தினங்கள் ஆகையால், அந்த இரண்டு தினங்களிலும், நான் சின்ன எஜமானருக்குச் சாப்பாடு போட்ட பிறகு என்னுடைய ஜாகைக்குப் போய் பிறகு பகல் நாலு மணிக்குத் திரும்பி வருகிறது வழக்கம். அதன்படி சனிக்கிழமை காலையில் நான் சாப்பாடு போட்டு விட்டு எஜமானரிடம் சொல்லிக் கொண்டு என் ஜாகைக்குப் போனேன். இரண்டு நாழிகைக்குப் பிறகு கோபாலசாமி வீட்டு வாசலில் திறவு கோலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, தாங்கள் எங்கேயோ நடக்கும் பாட்டுக் கச்சேரிக்குப் போவதாய்ச் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும், அதன் பிறகு அவர்கள் திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை" என்றாள். பட்டாபிராம பிள்ளை, "அதிருக்கட்டும், இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்று சொன்னாயே; இவர்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையான பிரியத்தோடு இருந்தார்களா? இவர்களுக்குள் எப்போதாவது சண்டை அல்லது மனஸ்தாபம் ஏற்பட்டதை நீ பார்த்ததுண்டா? இந்த கோபாலசாமி யின் சுபாவம் கபட சுபாவமா, அல்லது, ஒழுங்கான சுபாவமா?" என்றார். சமையல்காரி சிறிது சிந்தனை செய்து, "இவர்கள் இருவரும் எப்போதும் சிநேகமாகத் தான் இருந்தார்கள். ஆனால், அடிக்கடி இவர்கள் இருவரும் எதைப்பற்றியாவது வாக்குவாதம் செய்து ஒருவரிடத் தொருவர் கொதிப்பாகப் பேசிக் கொள்வதும் உண்டு. இரண்டொரு சந்தர்ப்பங்களில் இருவரும் ஒருவரிடத் தொருவர் முகங் கொடுத்து அன்னியோன்னியமாகப் பேசாமல் மனஸ்தாப மாக இருந்ததும் உண்டு. போன சனிக்கிழமைக்கு முந்திய நாள்