பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மாயா விநோதப் பரதேசி இரவில் கூட ஏதோ இவர்களுக்குள் பலமான வாக்குவாதம் நடந்தது. நம்முடைய சின்ன எஜமானரின் சுபாவம் எப்போதும் பெருந்தன்மையானது, அற்பபுத்தியே அவரிடம் இல்லை. பிறரிடம் அவர் கோபம் என்பதையே காட்டாமல் எல்லோரிடத் திலும் நிரம்பவும் தயாளமாகவும் காருண்யமாகவும் நடந்து கொள்வார். கபடம் என்பதே அவருக்குத் தெரியாது. ஆனால், இந்த கோபாலசாமியின் குணம் அதற்கு நேர் விரோதமானது. பொறாமை, கோபம், தான் என்ற அகம்பாவம், கபடம் இதெல்லாம் கொஞ்சம் அவரிடம் உண்டென்பதை நான் பல தடவைகளில் கண்டிருக்கிறேன். கோபாலசாமியிடத்தில் இப்படிப் பட்ட கெட்ட குணங்கள் கொஞ்சம் இருந்தாலும், சின்ன எஜமானர் அவரிடம் வைத்திருந்த பிரியத்திலும் மதிப்பிலும், அதை எல்லாம் பாராட்டாமல், அவரிடம் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தார்" என்றாள். அவ்வளவோடு அவர்களது சம்பாஷணை முடிந்தது. உடனே பட்டாபிராம பிள்ளை வந்திருப்பவர்களுக்கு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கும்படி, அவளை உள்ளே அனுப்பி விட்டு வேலாயுதம் பிள்ளையை நோக்கி, "அண்ணா கேட்டீர்களா இந்த அம்மாள் சொன்ன வரலாற்றை? இந்த கோபாலசாமி யின் குணாதிசயத்தைப் பற்றி இவள் சொன்ன தகவலை நாம் எண்ணிப் பார்த்தால், பெருத்த பணத் தொகையை எதிரிகள் இவனுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால், இவனுடைய புத்தி மாறிப் போகக் கூடியதென்றே படுகிறது. இவனைப் பற்றி நீங்கள் செய்த யூகம் சரியானதாகத் தோன்றுகிறது. சனிக்கிழமை காலையிலேயே இந்த கோபாலசாமி நம்முடைய பிள்ளையாண்டானை வஞ்சித்து அழைத்துப் போய் எதிராளிகளிடம் சிக்க வைத்து விட்டு ஒரு பெண் பிள்ளையையும் வேலைக்காரப் பெண் ஒருத்தியையும் அழைத்துக் கொண்டு எங்கள் பங்களாவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதே நிச்சயமான சங்கதியாகத் தோன்று கிறது. சரி; இருக்கட்டும். இவன் எங்கே தப்பினான்? வைத்திய சாலையில் தானே இருக்கிறான். டாக்டர்கள் இவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்றே சொல்லுகிறார்கள். உடனே போலீசார்