பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15 இவனைச் சிறைச்சாலையில் அடைத்து நயத்திலோ பயத்திலோ உண்மையைக் கிரகித்து விடுவார்கள். இருக்கட்டும், நான் உடனே போலீஸ் கமிஷனரிடம் போய் இந்த வரலாறுகளை எல்லாம் தெரிவித்து விட்டு என் ஜாகைக்குப் போகிறேன். இன்று எனக்கு வழக்கப்படி காலை 11-மணி முதல் மாலை 41/2 மணி வரையில் கச்சேரி உண்டு. அங்கே போய்விட்டு நான் நேராக இங்கே வருகி றேன். அதற்குள் நீங்கள் ஸ்நானம் போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு கொஞ்சம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுங் கள்" என்றார். வேலாயுதம் பிள்ளை, சரி அப்படியே செய்யுங்கள் என்று கூறி, அவரை இரகசியமான ஒரிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் திகம்பரசாமியாருக்கு எதிரிகள் பெட்டியில் நாகப்பாம்புகளை வைத்தனுப்பிய விவரத்தையும், அவர் அந்த அபாயத்தில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டு, இறந்து போய் விட்டதாகத் தந்திரம் செய்திருப்பதையும் கூறியதன்றி, அந்த விஷயத்தை வேறு யாரிடமும் வெளியிடாமல் பரம ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். அதுவுமன்றி, துரைத்தனத்தார் திகம்பரசாமியாரின் மரணத்தைப் பற்றி அதிசீக்கிரத்தில் விளம்பரம் வெளியிடுவார்கள் என்றும் கூறினார். அந்த எதிர்பாராத விபரீதச் செய்தியைக் கேட்டு இன்பமும் துன்பமும் அடைந்த பட்டாபிராம பிள்ளை முடிவாக அவரிடத்தி லும் கண்ணப்பாவிடத்திலும் அனுமதி பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டார். போனவர் நேராக போலீஸ் கமிஷனரது பங்களாவை அடைந்து, வேலாயுதம் பிள்ளை முதலியோர் வந்ததைப் பற்றியும், கோபாலசாமியைப் பற்றி அவர் தெரிந்து கொண்ட வரலாறுகளையும் சவிஸ்தாரமாகக் கூறினார். கந்தசாமியோடு கூடவே இருந்து படித்து வந்தவனான அவனது சிநேகிதன் கோபாலசாமியே அவனுக்குக் கெடுதல் செய்ய எத்தனித்திருக்கிறான் என்பதைக் கேட்ட போலீஸ் கமிஷனர் அளவற்ற வியப்பும் மனக்குழப்பமும் அடைந்தவராய், "ஆகா! அப்படியா சங்கதி என்ன உலகம் பாருங்கள்! இந்த உலகத்தில் பணம் செய்யும் வேலை எப்படி இருக்கிறது பார்த்தீர்