பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாயா விநோதப் பரதேசி களா! எவ்வளவோ அன்னியோன்னியமாக நடந்து கொள்ளும் சிநேகிதன், அண்ணன், தம்பி, பெண்ஜாதி, தாய், தகப்பன் முதலியவர்கள் ஒருவரை ஒருவர் பகைக்கவும், வெறுத்து விலக்கவும், ஒருவரை ஒருவர் கொல்லவும் துண்டத்தக்க மகா விபரீதமான ஒரு சக்தி இந்தப் பணத்தினிடம் அமைந்திருக்கிறது பார்த்தீர்களா! நீங்கள் சொல்லுகிறதைப் பார்த்தால், இந்த மன்னார் குடியாருடைய பகைவர்களின் புத்தி மகா யூகமாக வேலை செய்திருக்கிறது போலத் தோன்றுகிறது. அவர்கள் தங்களுடைய பணத்தையும் அபரிமிதமாக வாரி இறைக்கிறார்கள் போலிருக் கிறது. நல்ல வேளையாக இந்த ஒரு மனிதனாவது நம்முடைய வசத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். இல்லாவிட்டால் நமக்கு எவ்விதமான புலனும் தெரியாமல் போயிருக்கும். நேற்று மாலையில் நான் ஆஸ்பத்திரிக்குப் போய் அந்த கோபாலசாமி யைப் பார்த்த காலத்தில், டாக்டர் வந்து அவனுடைய உடம்பைப் பரீட்சித்துப் பார்த்தார். இந்த நான்கு தினங்களாய் அவன் ஆகாரம் என்பதே சாப்பிடவில்லையாம். அப்போதைக் கப்போது கண்கள் கொஞ்சம் திறந்து பிறகு மூடிக்கொள்ளுகின்றனவாம். நாடி வரவரத் தளர்ந்து கொண்டே போகிறதாம். காலில் இரண்டோர் இடங்களில் இருந்த வீக்கம் அநேகமாய்க் குறைந்து போயிருக்கிறது. அவனுடைய மண்டையில் பலமான அடிபட்டதனால், மூளை கலங்கிப் போயிருக்க வேண்டும் என்றும், அது இன்னம் சரியான நிலைமைக்கு வரவில்லை என்றும் டாக்டர் அபிப்பிராயம் தெரிவித்ததால், தலையின் மேல் காயம், அல்லது, வீக்கம் எதுவும் காணப்படவில்லை ஆகையால், ஊமைக் காயமாக தலையின் உள் பக்கத்தில் அடி தாக்கி இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். அவனுடைய பொறி கலங்கிப் போயிருப்பதைச் சரிப்படுத்த அவர் ஏதேதோ சிகிச்சைகளையும் தந்திரங்களையும் செய்து வருகிறார். இதுவரையில், எதுவும் பலன் தரவில்லை. அவர் இன்னம் மூன்று தினந்தான் கெடு வைத்திருக்கிறார். அதற்குள் அவனுடைய மூளை சரியான நிலைமைக்கு வரா விட்டால், அதற்கு மேல் அவன் பிழைக்க மாட்டான் என்று டாக்டர் முடிவாகச் சொல்லி விட்டார். தெய்வாதீனமாக அவன் பிழைத்துக் கொண்டால், நம்முடைய வேலை சுலபமாக முடிந்து